- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலியல் வழக்கில் கைதான ஜானி மாஸ்டர், போலீஸ் விசாரணையில் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரன் குறித்து...

பாலியல் வழக்கில் கைதான ஜானி மாஸ்டர், போலீஸ் விசாரணையில் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரன் குறித்து பேசி இருக்கிறாரே? – அவரை ஏம்பா இதுல கோர்த்து விடறீங்க?

- Advertisement -

ஜெயிலர் படத்தில் தமன்னா குத்தாட்டம் போட்ட காவலய்யா, பீஸ்ட் படத்தில் விஜய் நடனமாடிய ரஞ்சிதமே, திருச்சிற்றம்பலம் படத்தில் மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே போன்ற பல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்தவர் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர். கடந்த மாதத்தில், மத்திய அரசின் சிறந்த நடன இயக்குனர் தேசிய விருது அறிவிக்கப்பட்டவர் ஜானி மாஸ்டர்.

இந்நிலையில் பெண் நடனக் கலைஞர் ஒருவர், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினார். மைனர் பெண்ணாக இருந்த போதே தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஜானி மாஸ்டர் மீது புகார் கூறினார். இதையடுது்து ஜானி மாஸ்டர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோவாவில் தலைமறைவாக இருந்த அவரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.

- Advertisement -

இதற்கிடையே தெலுங்கு பிலிம் சேம்பர் நடன இயக்குனர் ஜானிமாஸ்டர் பெயரை நீக்கியது. இனிமேல் அவரை தெலுங்கு படங்களில் நடனம் அமைக்க அழைப்பதில்லை என்ற தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், தனது ஜனசேனா கட்சியில் இருந்தும் அவரை நிரந்தரமாக நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, இப்போது போலீசார் கஸ்டடியில் இருக்கும் ஜானி மாஸ்டர், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் அவர் புஷ்பா பட இயக்குனர் சுகுமாரனுக்கு நடந்த சம்பவங்கள் குறித்து தெரியும் என்று ஜானி மாஸ்டர் கூறியதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

என் மீது புகார் அளித்த பெண், அவராகவே வந்துதான் என்னிடம் வாய்ப்பு கேட்டார். அவரது திறமையை பார்த்து என்னிடம் உதவி நடன இயக்குனராக சேர்த்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் என்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு அவர் மிரட்டவும், டார்ச்சர் செய்யவும் ஆரம்பித்தார்.

இதுகுறித்து புஷ்பா படப்பிடிப்பின் போது நடந்ததால், படத்தின் இயக்குனர் சுகுமாரனிடம் நான் கூறினேன். அவரும் ஒருமுறை அந்த பெண்ணை அழைத்து அறிவுரை கூறினார். அதனால் அந்த பெண்ணிடம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் எனக்கு எதிராக சதி நடந்துக்கொண்டு இருக்கிறது என, ஜானி மாஸ்டர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்