- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்யை உருவ கேலி செய்து கொச்சைப்படுத்திய பத்திரிக்கைகள், அப்படி இருந்த ஆளு இப்போ எப்படி ஆகிட்டாரு...

விஜய்யை உருவ கேலி செய்து கொச்சைப்படுத்திய பத்திரிக்கைகள், அப்படி இருந்த ஆளு இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க

- Advertisement -

விஜய் தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகராக வலம் வருபவர். தமிழ்நாட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்பது போன்ற பேச்சுக்கள் ஒரு புறம் பேசப்பட்டு வருகின்றது. அந்தளவுக்கு மாஸ் ஆடியன்ஸை கைக்குள் போட்டு வைத்திருப்பவர். இந்த நிலையில் விஜய்க்கு இன்று 49 ஆவது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் திருவிழா போல் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் தனது முதல் திரைப்படமான “நாளைய தீர்ப்பு” திரைப்படத்தில் நடித்தபோது அவர்பட்ட அவமானங்கள் குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். சிறு வயதில் இருந்தே விஜய்க்கு தான் வருங்காலத்தில் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். இந்த நிலையில் இளம் வயதில் இருந்தே தனது தந்தையிடம் “என்னை ஹீரோவாக வைத்து எப்போது படம் எடுக்கப் போகிறீர்கள்?” என கேட்டுக்கொண்டே இருப்பாராம்.

அதன் படி தனது மகன் விஜய்யை ஹீரோவாக வைத்து எஸ்.ஏ.சி இயக்கிய திரைப்படம்தான் “நாளைய தீர்ப்பு”. இத்திரைப்படம் வெளிவந்தபோது பத்திரிக்கைகள் பல மிக கடுமையான விமர்சனங்களை வைத்தார்களாம். குறிப்பாக ஒரு முன்னணி பத்திரிக்கை லாரி டயரில் மாட்டிய தகர டப்பா போன்ற முகம் என்று விஜய்யை உருவ கேலி செய்தார்களாம்.

- Advertisement -

இந்த உருவ கேலியால் விஜய் மனம் உடைந்துப்போய் தனது அறையில் உட்கார்ந்து அழுதுகொண்டே இருந்தாராம். எனினும் அவரது தந்தை எஸ்.ஏ.சி, “இதுதான் சினிமா. இது போன்ற விமர்சனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். இதை எல்லாம் கடந்துதான் வர வேண்டும்” என்று அவருக்கு ஊக்கமளித்தாராம். இவ்வாறு ஒரு தகவலை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டுள்ளார்.

இவ்வாறு உருவ கேலி செய்யப்பட்ட விஜய், இன்று டாப் நடிகராக மக்களின் மனதில் நின்றுள்ளார் என்றால் அதற்கு அவரின் கடுமையான உழைப்பே காரணம்.

- Advertisement -

சற்று முன்