- Advertisement -
Homeபொழுதுபோக்குதயவு செய்து என்னை வைத்து தமிழில் ஒரு படத்தை இயக்குங்கள்... பிரபல இயக்குனரிடம் கெஞ்சிய தெலுங்கு...

தயவு செய்து என்னை வைத்து தமிழில் ஒரு படத்தை இயக்குங்கள்… பிரபல இயக்குனரிடம் கெஞ்சிய தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்… என்னடா நடக்குது இங்க…

- Advertisement -

கோலிவுட்டில் இங்கு முக்கிய நட்சத்திரங்களாக இருக்கும் பலரும், தமிழ்நாட்டை தாண்டி பிற மாநிலங்களிலும் தனது ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இதில் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது யார் என்றால் முதலில் விஜய் தான்.

 

- Advertisement -

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கைக்குள் வைத்திருக்கிறார் விஜய். விஜயின் படம் இங்கு வெளியானால் திரையரங்குகளில் எப்படி கொண்டாடப்படுகிறதோ அதற்கு நிகரான கொண்டாட்டமும் கேரளாவில் இருக்கிறது. இப்படி பிற மாநில நடிகரை தூக்கி வைத்துக் கொண்டாடுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

- Advertisement -

இதே போல் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் சூர்யாவுக்கு குறிப்பிட்டதக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்றால் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் செல்வதும், போஸ்டர் ஒட்டி கொண்டாடுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

 

இதேபோல் விஷால், தனுஷ், கார்த்தி உள்ளிட்ட ரசிகர்களுக்கும் பிற மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட தக்க அளவு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆனால் அதேசமயம் பிற மாநில நடிகர்களுக்கு, தமிழகத்தில் வரவேற்பு இருக்கிறது என்றால் அது மிக மிக குறைவு தான். மகேஷ்பாபு முதல் தெலுங்கு நடிகர்கள் பலரையும் தமிழர்கள் அறிந்திருந்தாலும் அவர்களின் திரைப்படங்களைக் கொண்டாடுவதில்லை.

 

விதிவிலக்காக மலையாள நடிகர் பகத் பாசில் மட்டும் தமிழ் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறார். அவரது படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் கொண்டாட்டங்கள் இல்லை என்றாலும், பகத் பாசிலுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் இணையத்தில் செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில்தான் தெலுங்கின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர், நேரடியாக ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

 

அவரது தேவாரா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அது தொடர்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் தயவு செய்து என்னை வைத்து தமிழில் ஒரு திரைப்படத்தை எடுங்கள். அது தெலுங்கில் டப் செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று பேசி இருக்கிறார். தெலுங்கில் ஒரு முன்னணி நட்சத்திரத்தின் இந்த பேச்சு தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

- Advertisement -

சற்று முன்