“கனா கண்டேன்”, “அயன்”, “கோ”, “மாற்றான்”, “அனேகன்”, “கவண்”, “காப்பான்” ஆகிய ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். இவர் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக நம்மை பிரிந்தார் கே.வி.ஆனந்த்.

இதனை தொடர்ந்து மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் மகளின் திருமணம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இத்திருமண நிகழ்ச்சியில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் “கவண்” திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதியும், “கோ” திரைப்படத்தில் நடித்த ஜீவாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஆனால் “அயன்”, “மாற்றான்”, “காப்பான்” ஆகிய வெற்றித் திரைப்படங்களில் நடித்த சூர்யாவும் “அனேகன்” திரைப்படத்தில் நடித்த தனுஷும் கே.வி.ஆனந்த் மகளின் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏன் சூர்யாவும் தனுஷும் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது. “அயன்” திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை குவித்த திரைப்படமாக அமைந்தது என்பதை ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். இவ்வாறு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக்கொடுத்த கே.வி.ஆனந்தின் மகள் திருமணத்திற்கு சூர்யா வராததால் அவர் நன்றி மறந்துவிட்டாரா? என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்களாம்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான ஜேஎஸ்கே கோபி, தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், “தமிழ் சினிமாவில் புகழ்மிக்கவர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அவர்களுக்கு உண்டான மரியாதை நட்பு அன்பு எல்லாம் கிடைக்கும்.. அந்த புகழ்மிக்கவர்கள் இறந்தவுடன் ஒரு சில நன்றியுள்ளவர்களை தவிர அனைவரும் அவர்களை மறந்துவிடுவார்கள். இதுதான் சினிமா டிசைன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் அந்த பதிவில், “மறைந்த இயக்குநர் ஒளிப்பதிவாளர் திரு KV ஆனந்த் அவர்களின் மகள் திருமண வரவேற்பு விழா இன்று நடந்தது.. KV ஆனந்த் சார் இயக்கத்தில் நடித்த பல ஹிரோக்கள் வரவில்லை..ஆனால் விஜய்சேதுபதி தனது பிஸியான கால்ஷீட்களிலும் நேரத்தை ஓதுக்கி இந்த விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.இந்த நன்றி மறவாத குணம்தான் சேதுவின் தனித்துவம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் புகழ்மிக்கவர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அவர்களுக்குன்டான மரியாதை நட்பு அன்பு எல்லாம் கிடைக்கும்..
அந்த புகழ்மிக்கவர்கள் இறந்தவுடன் ஒரு சில நன்றியுள்ளவர்களை தவிர அனைவரும் அவர்களை மறந்துவிடுவார்கள்.
இதுதான் சினிமா டிசைன்…
அந்த வகையில் மறைந்த இயக்குநர்… pic.twitter.com/CfTXWLjShl
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) July 6, 2023





