- Advertisement -
Homeபொழுதுபோக்குதாயன்புக்கு இணை ஏதம்மா… 30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கிய பிரபல நடிகரின் மனைவி… ஆச்சரியப்பட்ட...

தாயன்புக்கு இணை ஏதம்மா… 30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கிய பிரபல நடிகரின் மனைவி… ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால், வெண்ணிலா கபடிக்குழு படத்தின் அறிமுகமான அவர் தொடர்ந்து நீர்ப்பறவை ராட்சசன் லால் சலாம் சிலுக்குவார்பட்டி சிங்கம் முண்டாசுப்பட்டி இன்று நேற்று நாளை கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சினிமா நடிகராக மட்டுமின்றி சினிமா தயாரிப்பாளராகவும் விஷ்ணு விஷால் உள்ளார்.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. இவர் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி. ஆதரவற்ற பச்சிளம் குழந்தைகளுக்காக தனது 30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியிருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் பெண் குழந்தைக்கு தாயான ஜூவாலா குட்டா, தாய்ப்பால் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்காக கடந்த 4 மாதங்களாக தாய்ப்பால் வங்கிகளுக்கு, தனது தாய்ப்பாலை தானமாக வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஷ்ணு விஷால் ஏற்கனவே ரஜினி என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில், அவரை விவாகரத்து செய்து விட்டார். பிறகு பேட்மிண்டன் வீராங்கணையான ஜூவாலா கட்டாவை 2வது திருமணம் செய்தார். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி நடிகர் விஷ்ணு விஷால், ஜூவாலா கட்டா திருமணம் நடந்தது.

இருவருக்கும் திருமணமாகி 3 ஆண்டுகளாக குழந்தை இல்லை. அதன்பின் ஜூவாலா கட்டா கர்ப்பமானார். கடந்த ஏப்ரல் 22ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 42 வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்த ஜூவாலா கட்டா தனது தாய்ப்பாலை தானம் அளிக்க முன்வந்தார். அரசு மருத்துவமனையில் தினமும் 600 மில்லி தாய்ப்பாலை அவர் தானமாக அளித்து வருகிறார்.

- Advertisement -

கடந்த 4 மாதங்களில் இதுவரை 30 லிட்டர் தாய்ப்பாலை அவர் தானமாக வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் தினமும் பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஜூவாலா கட்டா தாய்பால் பருக தருவதன் மூலமாக அந்த குழந்தைகளுக்கும் அவர் தாயாகி வருகிறார். தனது குழந்தைக்கு தினமும் தாய்ப்பால் கொடுத்த பின்பு அரசு மருத்துவமனைக்கு அவர் தாய்பால் தானம் செய்து வருகிறார்.

இதுபோன்று பல தாய்மார்கள் செயல்பட்டு வந்தாலும் ஒரு விளையாட்டு வீராங்கனை மற்றும் பிரபலமான நடிகரின் மனைவி இப்படி முன் உதாரணமாக இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியம் தருகிறது. பிறந்த குழந்தைக்கு 6 மாதங்களுக்கு தாயப்பாலே பிரதான உணவாக இருந்து குழந்தைகளின் உடல் மற்றும் உயிரை வளர்க்கிறது. தாய்ப்பால் தானம் வழங்கி ஆதரவற்ற பல பச்சிளம் குழந்தைகளுக்கு தாயாக மாறிய ஜூவாலா கட்டாவின் இந்த கருணைமிக்க செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்