- Advertisement -
Homeபொழுதுபோக்குகேடு கெட்டவன் கெட்ட வார்த்தை பேசுவான்.. இது தமிழ்நாடு இந்த வேலை வேண்டாம்.. விஜய்யை எச்சரித்த...

கேடு கெட்டவன் கெட்ட வார்த்தை பேசுவான்.. இது தமிழ்நாடு இந்த வேலை வேண்டாம்.. விஜய்யை எச்சரித்த தயாரிப்பாளர்

- Advertisement -

கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் படம் என்றால் அது இப்போதைக்கு லியோதான். லோகேஷ் கனகராஜ் இயக்கம்; விஜய் நடிப்பு என படம் களைகட்டியிருக்கிறது. லலித்குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். விஜய் மட்டுமின்றி த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் என ஸ்டார் வேல்யூ அதிகம் இருக்கும் படமகாவும் மாறியிருக்கிறது லியோ.

எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பில் இந்தப் படம் இருக்கிறதோ அதே அளவு சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் படத்தின் முதல் சிங்கிளிலிருந்து கடைசியாக வெளியான ட்ரெய்லர்வரை சந்தித்திருக்கிறது. முக்கியமாக அர்சியலுக்கு வர ஆசைப்படும் விஜய் எந்த பொறுப்பும் இல்லாமல் இஷ்டத்துக்கு கெட்ட வார்த்தை பேசுவது, வாயில் சிகரெட்டுடன் நடனம் ஆடுவது என இருக்கிறார்.. அவருக்கெல்லாம் பொறுப்பே கிடையாது என விளாசிவருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன் அம்பு நாடு என்ற படத்தின் விழாவில் விஜய் குறித்து காட்டமாக பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், ”நான் எழுதும் வசனத்தை சென்சார் செய்யாமல் படம் ரிலீஸ் ஆனால் இந்த மாநிலத்தையே மாற்றிக்காட்டுவேன் பேரறிஞர் அண்ணா சொன்னார். அவரும் கலைஞர் கருணாநிதியும் திரைப்படத்தை மாற்றத்தின் சக்தியாக பார்த்தார்கள். ஆனால் இப்போது பணத்துக்காக படம் எடுக்கிறார்க்ள்.

கேடுகெட்டவர்களிலேயே கேவலமானவனாக எவன் இருக்கிறானோ அவனே கெட்ட வார்த்தை பேசுவான். காமராஜர் பள்ளி திறந்த பிறகு பலரும் படித்த பிறகு பல கெட்ட வார்த்தைகள் வழக்கொழிந்துவிட்டன. ஆனால் இப்போது சினிமாவில் மீண்டும் அது உயிர்ப்பித்திருக்கிறது. ஒரு கெட்ட வார்த்தையை பெரிய ஹீரோ சொல்லும்போது பலரிடம் சென்று சேரும். அதிலும் தலைவனாகலாம் என்று நினைக்கும் ஒருவர் இப்படி பேசக்கூடாது.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் அருமையான, திறமையான இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அவர் வளர வேண்டுமென விரும்புகிறேன். ஆனால் இப்படி கேடுகெட்ட கேவலமான வார்த்தையை வைத்தால் கண்டிப்பாக வாழ்க்கை சரியாக இருக்காது. இது தமிழ்நாடு தம்பி இந்த வேலையெல்லாம் வேண்டவே வேண்டாம். பேச்சை குறைத்து தவறுகளை தவிர்த்தால் மற்றவர்கள் பாராட்டுவார்கள். கோடி கோடியாக சம்பளம் வாங்கும் ஹீரோ இப்படி பேசக்கூடாது” என்றார்.

- Advertisement -

சற்று முன்