- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை காஜல் அகர்வால் திரை பயணத்தில் இப்படி ஒரு ஏமாற்றமா? பிரபல நடிகைக்கே இப்படி ஒரு...

நடிகை காஜல் அகர்வால் திரை பயணத்தில் இப்படி ஒரு ஏமாற்றமா? பிரபல நடிகைக்கே இப்படி ஒரு அவலமா? என்ன கொடும சார் இது…

- Advertisement -

இந்தியை பூர்வீகமாக கொண்டவர் நடிகை காஜல் அகர்வால். இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். அவரது தந்தையும் பாலிவுட்டில் சினிமா தயாரிப்பாளராக இருந்து வருகிறார். எனினும் தமிழில் பல படங்களில் காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். அதுவும் பெரிய வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா அஜீத்குமாருடன் விவேகம் கார்த்தியுடன் நான் மகான் அல்ல ஆல் இன் ஆல் அழகு ராஜா விஷாலுடன் பாயும் புலி மற்றும் பொம்மலாட்டம் பழனி பிருந்தாவனம் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் நிறைய படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்வில் செட்டிலான அவர், சற்று உடல் பருமன் ஆன நிலையில் காணப்பட்டார். தனக்கு பிள்ளை பிறந்த நிலையில் குழந்தையுடன் நிறைய புகைப்படங்கள், வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார்.

மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த காஜல் அகர்வால், தனக்கு கிடைத்த வாய்ப்புகளை ஏற்று படங்களில் நடித்தார். ஆனால் அவர் நடித்த படங்களில் அவருக்கான கேரக்டரின் முக்கியத்துத்தை இயக்குனர்கள் குறைத்து விடுவது அவருக்கு கடுமையான ஏமாற்றத்தை, விரக்தியை தந்து வருகிறது. ஆச்சாரியா என்ற தெலுங்கு படத்தில் சிரஞ்சீவியுடன் காஜல் அகர்வால் நடித்தார்.

- Advertisement -

ஆனால் படத்தின் நீளம் கருதி, காஜல் அகர்வால் நடித்த பெரும்பாலான காட்சிகளை ஆச்சாரியா படத்தில் இருந்து நீக்கி விட்டனர். அதன் பிறகு பாலகிருஷ்ணாவுடன் அவர் நடித்த பகவந்த் கேசரி படத்தில், குறைவான காட்சிகளில் மட்டுமே அவரை நடிக்க செய்து குணச்சித்திர நடிகை போல அந்த படத்தில் காட்டியுள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் அவர் இந்தியன் 2 படத்தில் ஆர்வமாக நடித்தார். ஆனால் அவர் நடித்த காட்சிகள் அனைத்துமே இந்தியன் 3 படத்துக்கு மாற்றிவிட்டதாக தெரிகிறது. இப்படி சீனியர் நடிகர்களின் முக்கிய படங்களில் நடித்தும் காஜல் அகர்வாலுக்கு முக்கியத்துவம் இல்லாமல் காட்சிகளை குறைப்பதால், காட்சிகளை நீக்குவதால் பலத்த ஏமாற்றத்தில் அவர் இருந்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்