- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது - விஜய் கட்சி பாடலை இதுவரை பார்வையிட்டவர்கள்...

தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது – விஜய் கட்சி பாடலை இதுவரை பார்வையிட்டவர்கள் இத்தனை பேர்தானா? – என்ன கொடும சார் இது?

- Advertisement -

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்குவதாக கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி அறிவித்தார். அதன்பிறகு கட்சியில் உறுப்பினராக சேர விரும்புபவர்களுக்காக செயலி ஒன்றையும் அறிமுகம் செய்து வைத்தார். வருகிற செப்டம்பர் மாதம் 22ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆனால் அரசியல் மாநாடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் விஜய் அறிவிக்கவில்லை. முதலில் மதுரை, பிறகு திருச்சி என பல பகுதிகளில் இடம் தேடிய நிலையில் இறுதியாக விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி இடையூறுகளால் மதுரை, திருச்சியில் மாநாடு நடத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

- Advertisement -

இதற்கிடையே நேற்று, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய விஜய், பனையூரில் உள்ள கட்சி தலைமை செயலகத்தில் கொடியேற்றினார். மேலும் அங்கு தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற பாடலையும் வெளியிட்டார். கவிஞர் விவேக் எழுதிய பாடல் வரிகளுக்கு தமன் இசையமைத்துள்ளார்.

வழக்கமாக விஜய் நடித்த படங்களில் இருந்து பாடல்கள் வெளிவந்தாலோ, அல்லது படத்தின் டிரெய்லர் வெளிவந்தாலோ சில மணி நேரங்களில் பல கோடி பார்வையாளர்களை அது கடந்துவிடும். விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு மாஸ் இருந்து வருகிறது. குறிப்பாக 17ம் தேதி மாலை வெளியான தி கோட் படத்தின் டிரெய்லர் வெளியான ஒரு நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் விஜய் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு அபரிமிதமான உற்சாக வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. தி கோட் படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதே போல் 1.6 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது. இதுவரை தி கோட் டிரெய்லரை 44 மில்லியன் பார்வையாளர்கள் எண்ணிக்கையை கடந்துள்ளனர்.

ஆனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் விஜய் வெளியிட்ட கட்சி பாடலை, 22 மணி நேரத்தில் 28 லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர். ஆனால் 5 நாட்களே ஆன நிலையில், தி கோட் டிரெய்லரை 44 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். அப்படி என்றால், விஜய் ரசிகர்களே கட்சி பாடலை பார்க்கவில்லை என்றால், ஓட்டு போடுவார்களா என்ற கேள்வி தவெக கட்சியினரிடையே எழுந்துள்ளது. இதையறிந்த நடிகர் விஜயும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்