தமிழ் சினிமாவில் இன்று நடிப்பு அரக்கன் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் எஸ்ஜே சூர்யா. மாநாடு மார்க் ஆண்டனி ராயன் இந்தியன் 2 கேம் சேஞ்சர் என தொடர்ந்து வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார். அடுத்ததாக அவரே இயக்கி நடிக்கும் படம் கில்லர். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
வாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. அஜீத்குமார் இரட்டை வேடத்தில் இந்த படத்தில் நடித்திருந்தார். இதில் ஒரு கேரக்டரில் வில்லனாக அஜீத்குமார் மிரட்டியிருந்தார். கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்தார். விவேக் காமெடி இந்த படத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. படமும் மாஸ் ஹிட் ஆனது.
இதையடுத்து எஸ்ஜே சூர்யா இயக்கிய படம் குஷி. விஜய் ஜோதிகா நடித்த இந்த படமும் சூப்பர் ஹிட் படமாக பேசப்பட்டது. இளம் காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ பிரச்னையை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களத்தை எஸ்ஜே சூர்யா உருவாக்கி இருந்தார். வாலி குஷி படங்களின் அபார வெற்றிக்கு பிறகு இயக்குனர் எஸ்ஜே சூர்யா நடிகராக திரையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.
வியாபாரி திருமகன் கள்வனின் காதலி நியூ அன்பே ஆருயிரே மெர்சல் இறைவி நெஞ்சம் மறப்பதில்லை டான் மான்ஸ்டர் இசை ஸ்பைடர் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இடையில் 10 ஆண்டுகள் தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன எஸ்ஜே சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
இந்நிலையில் எஸ்ஜே சூர்யா கதாநாயகனாக நடித்த படம் கள்வனின் காதலி. கடந்த 2006ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். பெண்களை போகப் பொருளாக நினைக்கும் எஸ்ஜே சூர்யா, ஒரு கட்டத்தில் நடிகை நயன்தாராவின் உண்மையான அன்புக்கு கட்டுப்பாட்டு நல்லவராக மாறுவதுதான் இந்த படத்தின் கதைக்களமாக இருந்தது.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார். விவேக் சரத்பாபு கஞ்சா கருப்பு பிரமிட் நடராஜன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். தமிழ்வாணன் டைரக்சன் செய்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் விரைவில் நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகிறது.





