- Advertisement -
Homeபொழுதுபோக்குமாஸ் ஹிட் பட டைரக்டரை வெயிட்டிங் லிஸ்ட்டில் கொண்டு வந்த கமல்ஹாசன், என்ன சார் இப்படி...

மாஸ் ஹிட் பட டைரக்டரை வெயிட்டிங் லிஸ்ட்டில் கொண்டு வந்த கமல்ஹாசன், என்ன சார் இப்படி பண்ணீட்டீங்க? – நேரடி டீலுக்கு தயாரான டைரக்டர்

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் இப்போது இந்தியன் 2 மற்றும் 3 படங்களில் நடிக்கிறார். ஏற்கனவே இந்தியன் 3 படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிக்கப்பட்ட நிலையில், இப்போது இந்தியன் 2 படத்துக்கான காட்சிகள்தான் வைஷாக்கில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் கமல் நடிக்கும், கமல் டூப் நடிக்கும் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தியன் 2, 3 படங்களை தொடர்ந்த புராஜக்ட் கே என துவக்கத்திலும், இப்போது கல்கி எனவும் பெயர் சொல்லப்படுகிற பிரபாஸ் படத்தில், கமல் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில்தான் கமல்ஹாசன் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சம்பளம் ரூ. 150 கோடி என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த புராஜெக்ட் படத்தை அடுத்து, கமல் அடுத்து நடிக்க உள்ள படம் மணிரத்னம் இயக்கும் தக் லைப் படம்தான். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில், சக்திவேல் ரங்கராஜ நாயக்கர் என்ற வசனம் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார். 36 ஆண்டுகளுக்கு முன் வந்த நாயகன் படத்துக்கு பிறகு, மணிரத்னம், கமல் இணையும் இந்த படம் பெரிய அளவில் பான் இந்தியா படமாக உருவாக்கப்பட உள்ளது.

இதற்கிடையே இன்னும் இரு மாதங்களுக்கு விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் வாரத்தில் ஒருநாள் அவர் கட்டாயம் பங்கேற்க வேண்டும். வாரத்தில் சனி, ஞாயிறு என 2 நாட்களில் கமல் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்காக கமல் ஒரு நாள் முழுவதும் இந்த ஷூட்டிங்கில் கலந்துக்கொள்கிறார்.

- Advertisement -

இதுமட்டுமின்றி வரும் 2024ம் ஆண்டில் பார்லிமென்ட் தேர்தல் வருகிறது. இதில் கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் கமல்ஹாசன் நிற்பார் என கூறப்பட்டுள்ளது. அது சட்டசபை தேர்தலுக்கு தான் என்றாலும், இப்போதைக்கு தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளுக்கும் பிரசாரத்துக்கு கமல்ஹாசன் அழைக்கப்படலாம். ஏனெனில், இண்டியா கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணைந்திருக்கிறது.

இத்தகைய காரணங்களால் இப்போது எச். வினோத் இயக்கும் கமல் படம், 2025்ம் ஆண்டின் மத்தியில், அல்லது 2025ம் ஆண்டில் இறுதியில் தான் கமல் கால்ஷீட் என்பது உறுதியாகி விட்டது. அதனால், 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலையில், ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தை நேரில் சந்திக்கும் வினோத், கமல் கால்ஷீட் தருவதற்குள் வேறு ஒரு படத்தை இயக்கி முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என ஒப்புதல் பெற உள்ளார். அந்த படம், குறிப்பாக தனுஷ் நடிக்கும் படமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு என மாஸ் ஹிட் கொடுத்த இயக்குநரையே இப்படி கமல் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்து விட்டாரே என்பதுதான் பலத்த கேள்வியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்