- Advertisement -
பெரியார் அறிவுலகத்திற்கான நூல்களின் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சிந்தை கட்டுரையை சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது பதிவில் கூறியிருப்பதாவது, இந்த காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்கு துரோகம் இழைத்தவர்கள். இந்த போலி நூல்கள் அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாக திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்று அதில் பதிவு செய்திருக்கிறார்.





