- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்சார் போர்டு குறித்து ராஜ்யசா எம்பி கமல்ஹாசன் தந்த திடீர் விளக்கம் - அப்படி இனிமேல்...

சென்சார் போர்டு குறித்து ராஜ்யசா எம்பி கமல்ஹாசன் தந்த திடீர் விளக்கம் – அப்படி இனிமேல் சொல்லாதீங்க என்றும் வேண்டுகோள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மூத்த கலைஞராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிக்க துவங்கிய அவரது நடிப்பு பயணம் இப்போது 73 வயதிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நடிகர் பாடகர் கவிஞர் பாடல் ஆசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் தொழில்நுட்ப கலைஞர் என சகல துறை சினிமா வித்தகராக கமல் இருந்து வருகிறார்.

இப்போது மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் உள்ள அவர் ராஜ்யசபா எம்பியாகவும் இருந்து வருகிறார். அன்பறிவ் இயக்கத்திலும் அதைத் தொடர்ந்து ரஜினியுடன் நெல்சன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இப்போது சென்சார் போர்டு குறித்து கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதுகுறித்து ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது, பல ஆண்டுகால விவாதங்களுக்கு பிறகு சென்சார் என்ற சொல்லை நீக்க சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். அந்த அமைப்பின் பெயர் சென்ட்ரல் போர்டு ஆஃப் பிலிம் சர்டிபிகேஷன் தான்.

சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் அது. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபிறகு அந்த சொல்லை பயன்படுத்த வேண்டாம்.

- Advertisement -

கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும் தான் என்று அந்த பதிவில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார் இப்போது ஊடகங்களில் பேச்சு வழக்கில் சினிமா சென்சார், சென்சார் போர்டு போன்ற வார்த்தைகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். அது தவறானது.

சினிமாவை தணிக்கை செய்வது அந்த அமைப்பு இல்லை. அது சான்றிதழ் வழங்கும் அமைப்பு என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவின் வாயிலாக தெளிவுபடுத்தி உள்ளார். அதாவது சான்றிதழ் வழங்கும் ஒரு அமைப்புதான் சென்சார் போர்டே தவிர படத்தை தணிக்கை செய்வது அவர்களின் பணியல்ல என்பதையும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்