- Advertisement -
Homeபொழுதுபோக்குநிஜத்தில் நடிகர் சிம்பு மீது அன்பு மழை பொழியும் நடிகர் கமல்ஹாசன் - ஆனால் தக்லைஃப்...

நிஜத்தில் நடிகர் சிம்பு மீது அன்பு மழை பொழியும் நடிகர் கமல்ஹாசன் – ஆனால் தக்லைஃப் படப்பிடிப்பில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருக்கிறார். இதுவரை அவர் நடித்த 235 படங்கள் வெளியான நிலையில் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்து வெளிவர உள்ள தக்லைஃப் படம் அவரது 236வது படமாகும். அடுத்து ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் கமல் தனது 237வது படத்தில் நடிக்க உள்ளார். தக்லைஃப் படம் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.

தக்லைஃப் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் சிம்பு திரிஷா அசோக் செல்வன் அபிராமி மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே ஜிங்குச்சா என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் தக்லைஃப் படத்தின் பாடல் அறிமுக விழாவில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிம்பு மீது அதிக கவனம் செலுத்தினார். சிம்புவின் அப்பா என் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர் அழுதுவிடுவார். அவரைப் போலவே அவரது மகன் சிம்புவும் என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்.

சிம்புவின் அப்பா டிஆர் பாசத்தில் 8 அடி என்றால் அதே பாசத்தில் சிம்பு 16 அடி பாய்பவராக இருக்கிறார். இந்த காலத்தில் இப்படிப்பட்ட அன்பு கிடைப்பது கஷ்டம் என்றெல்லாம் பேசியிருந்தார். சிம்புவை அழைத்து தன் அருகில் அமர வைத்து விருந்தில் சாப்பிட்டார். போட்டோஷூட் நடந்த போது சிம்புவை முதலில் செல்ல வைத்து, பிறகு காத்திருந்த அவர் போட்டோஷூட்டில் பங்கேற்றார்.

- Advertisement -

நிஜத்தில்தான் இப்படி சிம்பு மீது கமல்ஹாசன் அன்பை பொழிந்து வருகிறார். ஆனால் தக்லைஃப் படப்பிடிப்பில் நடந்த சம்பவமே வேறு என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது தக்லைஃப் படத்தை பொருத்த வரை கமலை விட சிம்புவுக்கு படத்தில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமின்றி கமல் சிம்பு இருவரும் எதிரெதிர் குணங்களை கொண்டவர்களாக நடித்திருக்கின்றனர். ஒரு காட்சியில் சிம்புவின் கழுத்தை கமலும் கமலின் கழுத்தை சிம்புவும் பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் கழுத்தை நெறித்துக்கொள்ளும் மிக ஆக்ரோஷமான காட்சியில் நடித்திருக்கின்றனர். அதனால் தக்லைஃப் படம் திரையில் அனல் பறக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்