- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இயக்குனர் மிஷ்கின் - அவருக்கு சிபாரிசு செய்து...

பிரபல டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இயக்குனர் மிஷ்கின் – அவருக்கு சிபாரிசு செய்து வாய்ப்பை வாங்கி தந்தது இந்த பிரபல நடிகரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் மிக நல்ல படங்களை தந்தவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி முகமூடி துப்பறிவாளன் சைக்கோ என பல படங்களை அவர் இயக்கியவர். சவரக்கத்தி மாவீரன் லியோ டிராகன் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இயக்குனராக நடிகராக சிறந்த கலைஞனாக தன்னை மிஷ்கின் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவியில் இப்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் ரியாலிடி ஷோவில் 4 நடுவர்களில் ஒருவராக இயக்குனர் மிஷ்கின் பங்கேற்று வருகிறார். எப்போதுமே வேறுபட்ட கோணத்தில் தன்னை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின், இந்த நிகழ்ச்சியில் பாடியவரை பாராட்டாமல் பாடலுக்கு ஆடிய பெண்ணை மேடையேற்றி பாராட்டியது சமீபத்தில் விமர்சனத்தில் சிக்கியது.

ஆனாலும் விஜய் டிவியை பொருத்த வரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மிஷ்கின் நடுவராக பங்கேற்று இருப்பதால் அவரது வித்யாசமான செயல்பாடும் துடுக்குத்தனமான பேச்சும் எப்படியும் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுத் தந்து டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த சூழலில் இயக்குனர் மிஷ்கின், விஜய் டிவியில் நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடுவராக செலக்ட் ஆனது எப்படி என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாய்ப்பை தேடி நிச்சயமாக இயக்குனர் மிஷ்கின் போகவில்லை. அதே நேரத்தில் விஜய் டிவி நிர்வாகமும் இதற்காக மிஷ்கினை அணுகவில்லை. ஆனால் இதற்கு காரணமாக இருந்தவர் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதிதான் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் இன்னும் வெளியாவில்லை. அதே போல் மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படமும் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது. மேலும் பொருளாதார சிரமத்தில் மிஷ்கின் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடுவராக இயக்குனர் மிஷ்கினை நியமனம் செய்யுமாறு விஜய் டிவி நிர்வாகத்திடம் நடிகர் விஜய் சேதுபதி பரிந்துரை செய்திருக்கிறார்.

ஏனெனில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்தாண்டில் தொகுத்து வழங்கியது விஜய் சேதுபதிதான். வரும் அக்டோபரில் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதும் அவரே தான். அந்த செல்வாக்கில் விஜய் டிவி நிர்வாகத்துடன் நெருக்கமான தொடர்பில் உள்ள விஜய் சேதுபதிதான் இந்த வாய்ப்பை இயக்குனர் மிஷ்கினுக்கு பெற்றுத் தந்திருக்கிறார் என்று இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.

சற்று முன்