லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் பணிகள் தொடங்கும் போதே நிச்சயமாக கூலி திரைப்படம் எல் சி யு-க்குள் வராது என்று அவர் தெளிவுபடுத்தி இருந்தார். இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முழு வீச்சாக நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்களை இடம்பெற வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஸ்ருதிஹாசன் இடம்பெற்றுள்ள நிலையில் அவருக்கு படத்தில் ரஜினிகாந்த் மகள் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் நண்பராக வருகிறார் சத்யராஜ்.
இதுபோக கன்னட நடிகர் உபேந்திரா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, மலையாள நடிகர் ஷோபின் சபீர் உள்ளிட்டோரும் வருகிறார்கள். அண்மையில் ஜெய்ப்பூரில் இதன் சூட்டிங் நடத்தப்பட்டது. அப்போது பாலிவுட் நடிகர் அமீர் கானும் இந்த திரைப்படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி தான் என்று பலரும் பேசி வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 70% நிறைவு பெற்றுள்ளது. தற்போது சென்னையில் கூலி படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இரண்டு வாரங்கள் இந்த பணிகள் தொடரும் என்றும் இதில் ரஜினிகாந்துக்கான போர்ஷன்கள் இருக்கும் என்றும் சொல்கிறார்கள். இந்த படத்திற்கு பிறகு கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
கார்த்தியின் முப்பதாவது திரைப்படமாக இது உருவாகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள்ளேயே இதன் படபிடிப்பை தொடங்குவதற்கு லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு உள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்களிலேயே அவர் எல்சி யூ கான்செப்ட்டை நிறைவுக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறாராம்.
அதனால் இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக கமல்ஹாசன் கைதி 2 வில் வருவாராம். ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நம்மை பயமுறுத்திய சூர்யாவுக்கும் இந்த திரைப்படத்தில் முக்கிய காட்சிகள் இருக்கிறதாம். இருவரும் கைதி 2வில் இருப்பது உறுதியாக இருக்கும் நிலையில், ப்ரீ ப்ரொடக்சன் பணிகளும் வேகம் எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





