- Advertisement -
Homeபொழுதுபோக்குவிசித்ரா சொன்ன விவகாரத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்குதா, பிக்பாஸ் தந்த டாஸ்க்கில் மறைந்திருக்கும் மர்மம்...

விசித்ரா சொன்ன விவகாரத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்குதா, பிக்பாஸ் தந்த டாஸ்க்கில் மறைந்திருக்கும் மர்மம் – கமல் தரப்போகும் பதிலில் தெரியுமா?

- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகான், லியோ படத்தில் திரிஷா உடன் சேர்ந்து நடிக்கவில்லை என்று விளையாட்டுத்தனமாக பேசியது, பெரிய வில்லங்கமாக மாறிவிட்டது. ரேப் காட்சிகளில், கவர்ச்சியான உடைகளில், நடனங்களில், ஹீரோவுடன் நடிக்கும் நடிகைகள், மன்சூர் அலிகான் பேசியதை விவகாரமாக்க அவசியமில்லை என்ற கருத்தும் ஒருபுறம் எழுந்துள்ளது.

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் தீப்பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் இந்த சூழலில், பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சீனியா் நடிகை விசித்ரா, 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கேரளாவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு விஷயத்தை, தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்தார்.

- Advertisement -

அதில் 2001ம் ஆண்டில் கேரளா, மலம்புழாவில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்ற டாப் நடிகர், இன்னிக்கு நைட் ரூமுக்கு வந்துடு’ என அழைத்தார். வராத என்னை, பலவிதங்களில் டார்ச்சர் செய்தார். சண்டைக்காட்சி ஒன்றில், சிலர் என் உடல் அங்கங்களை தொட்டனர், இதுகுறித்து ஸ்டண்ட் மாஸ்டரிடம் புகார் தெரிவித்த என்னை, அந்த ஸ்டண்ட் மாஸ்டர் கன்னத்தில் அறைந்தார், என்றும் கூறியிருந்தார்.

இது பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் வைரலானது. 2001ல் நடந்த அந்த ஷூட்டிங் பலேவடிவி என்ற தெலுங்கு படம். அதில் ஹீரோவாக நடித்தவர், தெலுங்கு ஹீரோ நடிகர் பாலய்யா என்கிற பாலகிருஷ்ணன். விசித்ராவை அறித்த ஸ்டண்ட் மாஸ்டர் ஏ.விஜய் என்றும் புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு டிரண்டிங் ஆக்கி விட்டனர். அது பயங்கர வைரலானது.

- Advertisement -

மன்சூர் அலிகான், திரிஷாவை பற்றி பேசியதாக சர்ச்சை எழுந்த நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் விசித்ரா சொன்ன அந்த சம்பவமும், இன்னும் அதிக சர்ச்சையை, விமர்சனத்தை, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை விசித்ரா ஏதேச்சையாக சொன்னாரா, அல்லது பிக்பாஸ் சொல்லி, இந்த வார கண்டென்ட்டுக்காக இது சொல்லப்பட்டதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

பிக்பாஸ் வீட்டுக்குள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ரெட்கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றிய கமல், இந்த வார சனிக்கிழமையன்று, விசித்ரா கூறிய சம்பவம் குறித்து பேசுவாரா, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போன்றவரை கண்டிப்பாரா, அவர் பேசுவதை பொருத்துதான் இது தானாக நடந்த விஷயமா, அல்லது பிக்பாஸ் உருவாக்கிய கண்டென்டா என்பது வெளிச்சத்துக்கு வரும்.

- Advertisement -

சற்று முன்