- Advertisement -
Homeபொழுதுபோக்குரெட்ரோ படத்தில் அந்த கேரக்டரில் நடிகர் வடிவேலுவா? - வெளிப்படையாக பேசிய படத்தின் இயக்குனர் கார்த்திக்...

ரெட்ரோ படத்தில் அந்த கேரக்டரில் நடிகர் வடிவேலுவா? – வெளிப்படையாக பேசிய படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வருபவர் நடிகர் சூர்யா. கடந்த 10 ஆண்டுகளில் அவர் நடித்த 12 படங்களில் ஜெய்பீம் சூரரைப் போற்று என 2 படங்கள் மட்டுமே நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வணிக ரீதியான வெற்றியை பெற்றிருக்கிறது. மற்றபடி தியேட்டரில் வெளியான 10 படங்களும் வரவேற்பை பெறவில்லை.

அஞ்சான் காப்பான் 24 சிங்கம் 3 பசங்க 2 தானா சேர்ந்த கூட்டம் எதற்கும் துணிந்தவன் மாசு என்கிற மாசிலாமணி என்ஜிகே மற்றும் கங்குவா என இந்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. வெங்கட்பிரபு பாண்டிராஜ் கேவி ஆனந்த் சிறுத்தை சிவா ஹரி செல்வராகவன் என முன்னணி இயக்குனர்கள் இயக்கிய படங்களாகவும் அவை இருந்தன.

- Advertisement -

இந்த சூழலில் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 44வது படமாக ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து இதுவரை 3 சிங்கிள்கள் வெளியாகி உள்ளன. அந்த பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இதையடுத்து வருகிற 18ம் தேதி சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதில் சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரெட்ரோ படத்தில் நடிகர் ஜெயராம் நடித்தது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது, ஜெயராம் சாரை அவரது இயல்பான நடிப்பிற்காகவே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கொடுக்கிற எந்த கேரக்டராக இருந்தாலும் சிறப்பாக அதை அடுத்த இடத்துக்கு கொண்டு போய்விடுவார். அந்த வகையில் பஞ்சதந்திரம் படத்தை மறக்கவே முடியாது..

ஜெயராம் சாரை அணுகும் போது அவர் மகளின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த கேரக்டருக்கு வடிவேல் சார் கூட யோசித்தோம். ஆனாலும் காத்திருந்து நடிகர் ஜெயராமை இந்த ப்ராஜெக்ட்டுக்குள் கொண்டு வந்தோம் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருக்கிறார். அதாவது ஜெயராம் கேரக்டரில் வடிவேலு நடிக்க இருந்த விஷயத்தையும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்