- Advertisement -
Homeபொழுதுபோக்குடிராகன் படத்தில் இப்படி ஒரு தரமான சம்பவம் நடந்திருக்குதா? அட நிறைய பேர் இதை கவனிக்காமல்...

டிராகன் படத்தில் இப்படி ஒரு தரமான சம்பவம் நடந்திருக்குதா? அட நிறைய பேர் இதை கவனிக்காமல் விட்டுட்டாங்களே?

- Advertisement -

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவரே கதாநாயகனாக நடித்து டைரக்ட் செய்த படம் லவ் டுடே. இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இவானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

அடுத்து ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் டிராகன். கடந்த மாதம் 21ம் தேதி வெளியான இந்த படம் 3 நாட்களில் ரூ. 50 கோடி 9 நாட்களில் ரூ. 100 கோடி என்று அபார வசூலை எட்டியது. இப்போது வரை டிராகன் படம் வசூல் ரூ. 140 கோடியை கடந்து ரூ. 150 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

டிராகன் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்திருக்கிறார். அதே நேரத்தில் இந்த படத்தில் சில காட்சிகளில் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் நடித்திருக்கிறார். அதே போல் இயக்குனர்கள் கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தில் நாயகி கயாடு லோஹரின் தந்தை கேரக்டரில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன், கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் பணிசெய்யும் ஐடி நிறுவனத்தின் உயர் அதிகாரியாகவும் நடித்திருந்தார், அத்துடன் படத்தில் நாயகன் பிரதீப் படிக்கும் கல்லூரியின் முதல்வராக இயக்குனர் மிஷ்கின் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டிராகன் படத்தில் கோமாளி லவ்டுடே படங்களை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், ஓமை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய கேஎஸ் ரவிக்குமார் கௌதம் மேனன் மற்றும் மிஷ்கின் என மொத்தம் 5 இயக்குனர்கள் நடித்திருக்கின்றனர். ஒரு படத்தில் ஒரு இயக்குனர் நடிப்பதே பெரிய சவாலான விஷயம் என்ற நிலையில் வெற்றிப் பட இயக்குனர்கள் 4 பேரை தனது இயக்கத்தில் டிராகன் படத்தில் அஸ்வத் மாரிமுத்து நடிக்க செய்திருக்கிறார்.

டிராகன் படத்தில் நடித்த 4 இயக்குனர்களுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, வெவ்வெறு தலைமுறைகளை சேர்ந்த 4 தனித்துவமான இயக்குனர்களை இயக்கிய மறக்க முடியாதது. நினைவில் கொள்ள வேண்டிய தருணம் என்று அதில் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்