- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடிகளா? அடேங்கப்பா, வசூலை அள்ளிய கருப்பு படம் - தரமான...

தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை கோடிகளா? அடேங்கப்பா, வசூலை அள்ளிய கருப்பு படம் – தரமான சம்பவத்தை சத்தமின்றி செய்து காட்டிய நடிகர் சூர்யா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் காக்க காக்க மௌனம் பேசியதே நந்தா பிதாமகன் கஜினி உன்னை நினைத்து சிங்கம் பேரழகன் சிங்கம் 2 ஏழாம் அறிவு வேல் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்தவர். ஆனால் சிங்கம் 2 படத்துக்கு பிறகு பெரிய வெற்றி படம் அமையவில்லை.

அதே நேரத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியான ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று என சூர்யா நடித்த 2 படங்களும் வணிகரீதியான வெற்றிப் படங்களாக இருந்தன. இந்த படங்கள் கொரோனா காலகட்டம் என்பதால் தியேட்டரில் வராமல் ஓடிடியில் நேரடியாக வெளியாகின.

- Advertisement -

ஆனால் தியேட்டரில் 2013ம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படத்துக்கு பிறகு கடைசியாக வெளியான கங்குவா படம் வரை பெரிய வெற்றி இல்லை. கடந்தாண்டில் வெளியான ரெட்ரோ படமும் சூர்யாவுக்கு வணிக ரீதியான வெற்றி என்றாலும் தியேட்டரில் பெரிய வெற்றிக்கொண்டாட்டமாக படம் பேசப்படவில்லை.

கடந்த 2024ம் ஆண்டில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பில் சூர்யா திரிஷா மற்றும் பலர் நடித்த கருப்பு படம் கடந்த மாதம் மே 15ம் தேதி வெளியானது.

- Advertisement -

இந்த படம் உலக அளவில் மொத்தம் 340 கோடி ரூபாய் வசூலித்ததாக கடந்த 12ம் தேதி அதிகாரபூர்வமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. தற்போது தமிழ்நாட்டில் மட்டும் கருப்பு படம் 191 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தமிழக விநியோக நிறுவனம் சக்தி பிலிம் பேக்டரி அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கருப்பு படம் வெளியான 3 நாட்களில் ரூ. 60 கோடி 4 நாட்களில் ரூ. 80 கோடி 7 நாட்களில் ரூ. 100 கோடி 10 நாட்களில் ரூ. 130 கோடி 13 நாட்களில் ரூ. 150 கோடி 20 நாட்களில் ரூ. 175 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக இதற்கு முன்பு அறிவித்திருந்தனர். அதன் பின்பு கூடுதலாக தற்போது 16 கோடி ரூபாயை கருப்பு படம் வசூலித்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் கருப்பு படம் 191 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கருப்பு படம் கடந்த 12ம் தேதியே ஓடிடியில் வெளியாகிவிட்டது.

- Advertisement -

சற்று முன்