- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம், சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம், நடிகர் கவினுக்கு...

வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம், சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம், நடிகர் கவினுக்கு கை நழுவிப் போக இதுதான் காரணம் – உண்மையை மறைச்சுட்டீங்களே ப்ரோ?

- Advertisement -

நடிகர் கவின் துவக்கத்தில் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட டிவி சீரியல்கள் சிலவற்றில் நடித்துக்கொண்டு இருந்தவர். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். அவர், லாஸ்லியாவை காதல் செய்ததால், பிக்பாஸ் வீட்டுக்குள் பரபரப்பாக பேசப்பட்டார்.

கடந்த பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்று, கமல்ஹாசன் ரெட்கார்டு கொடுத்து அனுப்பியவர் பிரதீப். அவரும், கவினும் நெருங்கிய நண்பர்கள். கவின், பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது, அவரை பார்க்க வந்த பிரதீப், யாரும் எதிர்பாராத வகையில் கவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது, அப்போதே வைரலானது.

- Advertisement -

பிக்பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியாவை சின்சியராக கவின் காதலித்த நிலையில், அவரது காதலை லாஸ்லியா ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் ஒரு கட்டத்தில் கவின், மனம் சோர்ந்த நிலையில் காணப்பட்டார். பின்னர் மனதை தேற்றிக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தார். ஆனால் பிக்பாஸ் தந்த பிரபலத்தால் டாடா, லிப்ட் போன்ற படங்களில் நடித்தார்.

இந்த இரண்டு படங்களுமே கவினுக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது. தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்த நிலையில், இப்போதும் சில படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இதற்கிடையே வெற்றிமாறன் படம் ஒன்றிலும், சுந்தர் சி படம் ஒன்றிலும் நடிக்க வந்த வாய்ப்பை கவின் அவராகவே மறுத்து, நழுவ விட்ட தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

- Advertisement -

அதாவது வெற்றிமாறன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க கவினை அழைத்துள்ளார். அவர் தனது சம்பளம் ரூ. 5 கோடி என்று கேட்டுள்ளார். 2 வெற்றிப் படங்களை மட்டுமே தந்த நிலையில், அவ்வளவு பெரிய சம்பளம் தர முடியாது. ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று வெற்றிமாறன் கூறிய நிலையில், இல்லை. அதைவிட குறைந்த சம்பளம் என்றால் நடிக்க மாட்டேன். 5 கோடி ரூபாய் சம்பளம் என்றால்தான் நடிப்பேன் என்று மறுத்து விட்டார்.

அதே போல் சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 3 படத்தில் கவினை, சுந்தர் சி அழைத்துள்ளார். அவரிடம் தனது சம்பளம் ரூ. 6 கோடி என கேட்டுள்ளார். சுந்தர் சி, ஒன்றரை கோடி சம்பளம் தருவதாக கூறியுள்ளார். வாய்ப்பில்ல ராஜா என்று மறுத்துவிட்டு வந்துவிட்டார் கவின். வெற்றிமாறன் தயாரிப்பு, சுந்தர் சி படங்களில் நடிப்பது, மிகப்பெரிய வாய்ப்பு. அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாசல் கதவுகளை திறக்கும் என்ற நிலையில், இப்படி கோட்டை விட்டு விட்டிருக்கிறாரே கவின் என்று ரசிகர்கள் பலரும் கவினை திட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்