- Advertisement -
Homeபொழுதுபோக்குகாந்தாரா படம் குறித்து இதுவரை வெளிவராத முக்கிய தகவல்கள்… அடடா என ஆச்சரியப்படும் ரசிகர்கள் -...

காந்தாரா படம் குறித்து இதுவரை வெளிவராத முக்கிய தகவல்கள்… அடடா என ஆச்சரியப்படும் ரசிகர்கள் – சகுனங்களை கடந்து காந்தாரா ஜெயிக்குமா?

- Advertisement -

சில படங்கள் சத்தமே இல்லாமல் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. படம் குறித்த எந்த அறிவிப்பும் பிரமோசனும் இல்லாத நிலையில் அந்த படம் வெளியாகி சில நாட்களில் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று ஹவுல்புல் காட்சிகளாக திரையரங்குகள் மாறிவிடும். அந்த வரிசையில் லப்பர் பந்து டூரிஸ்ட் ஃபேமிலி படங்களை போன்ற ஒன்றாக தான் காந்தாரா படமும் இருந்தது.

கடந்த 2022ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் கன்னட மொழியில் வெளியான படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இந்த படத்தின் ஹீரோவாக நடித்து அவரே இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். சப்தமி கெளடா கிஷோர் அச்யுத் குமார் பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் தமிழ் தெலுங்கு இந்தி என பிற மொழிகளிலும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 16 கோடி என்றும் ஆனால் 305 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது என்றும் கூறப்படுகிறது. இப்போது காந்தாரா படத்தின் 2ம் பாகம் வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக உருவான இந்த படத்தில் 800ம் ஆண்டு கால பின்னணியில் காந்தாரா படம் அதன் முந்தைய கால சம்பவங்களை கொண்ட கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

காந்தாரா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 2ம் பாகம் ஷூட்டிங் துவங்கிய நாளில் இருந்து இதுவரை காந்தாரா படக்குழுவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மலைப்பகுதியில் படக்குழு வாகனம் சென்றபோது அந்த வாகனம் கவிழ்ந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதே போல் படக்குழு ஆற்றில் படகில் சென்ற போது அந்த படகு கவிழ்ந்தும் விபத்து ஏற்பட்டது.

- Advertisement -

படகில் பயணித்த படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் நீச்சலடித்தே கரைக்கு வந்து சேர்ந்து உயிர் பிழைத்ததாகவும் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்கள் வெளியாகின. எனினும் இந்த போராட்டங்கள், அபசகுனங்களை கடந்து இந்த படத்தை ஏறக்குறைய எடுத்து முடித்துவிட்டனர்.

குறிப்பாக இந்த படத்தில் 6 சண்டை காட்சிகள் வருகின்றன. இதில் 4 சண்டை காட்சிகள் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்களை கொண்டு படமாக்கப்பட்டு உள்ளது. கிளைமாக்ஸ் சண்டைகாட்சி மட்டுமே 46 நாட்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு படமாகி உள்ளது. அதனால் காந்தாரா படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிக விரைவில் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்