- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் நடித்திருக்க வேண்டியது விஜய் சேதுபதி, திரிஷா அல்ல - இயக்குனர் சொன்னதை கேட்டு...

அந்த படத்தில் நடித்திருக்க வேண்டியது விஜய் சேதுபதி, திரிஷா அல்ல – இயக்குனர் சொன்னதை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள் – இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே?

- Advertisement -

கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் 96. நடிகர் விஜய் சேதுபதி நடிகை திரிஷா நாயகன் நாயகியாக நடித்த இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. தேவதர்ஷினி ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம், பள்ளியில் படித்த மாணவ பருவ காலத்தை மையப்படுத்திய காதல் கதையாக இருந்தது.

இந்த படத்தில் ஜானு என்ற கேரக்டரில் திரிஷாவின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பிரேம் குமார் இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் இயக்கிய படம்தான் கடந்தாண்டில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே பள்ளியில் படித்த மாணவ மாணவியர் நட்பை காதலை சொன்ன படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் தங்கர்பச்சான் இயக்கிய அழகி பள்ளிக்கூடம் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் போன்ற வெற்றிப் படங்களின் வரிசையில் 96 படமும் அமைந்திருந்தது.

ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தை மீண்டும் 96 படத்தை 2ம் பாகமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நடிகை திரிஷா ஆகியோரின் கால்ஷீட் கிடைத்தால் 96 படத்தின் 2ம் பாகத்தை ஸ்கிரிப்ட் செய்து இயக்க துவங்கி விடுவேன் என ஏற்கனவே 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் கூறியிருந்தார்.

விஜய் சேதுபதி திரிஷா இருவருக்குமே 96 படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க விருப்பம் இருந்தாலும் இப்போதைய சூழலில், அவர்களுக்கு அடுத்தடுத்த லைன் அப் இருப்பதால் 96 படம் 2ம் பாகம் உருவாவதில் தாமதம் நீடிக்கிறது. இந்த சூழலில் 96 படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை இயக்குனர் கூறியிருக்கிறார்.

இதுபற்றி இயக்குனர் பிரேம் குமார் கூறியதாவது, நான் மம்முட்டி மோகன்லால் படங்களை பார்த்து வளர்ந்தவன். அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதே போல் பகத் பாசில் துல்கர் சல்மான் போன்ற இப்போதைய தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து படம் செய்ய வேண்டும். 96 படத்தை நான் 1990களில் இயக்குனராக இருந்து எடுத்திருந்தால் அந்த படத்தில் மோகன்லால் ஷோபனா தான் நாயகன் நாயகியாக நடித்திருப்பார்கள். எப்போதுமே அவர்கள்தான் சிறந்த ஜோடி என்று அவர் கூறியிருக்கிறார்.

சற்று முன்