- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை குஷ்பு தேர்தல் பிரசாரத்துக்கு போகாமல் தவிர்த்தது ஏன்? வெளியானது உண்மை தகவல்கள் - ஆனாலும்...

நடிகை குஷ்பு தேர்தல் பிரசாரத்துக்கு போகாமல் தவிர்த்தது ஏன்? வெளியானது உண்மை தகவல்கள் – ஆனாலும் கடைசி நேரத்துல இப்படி குஷ்பு காலை வாரலாமா?

- Advertisement -

கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் நடிகை குஷ்புதான் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தார். சின்னத்தம்பி படம் பார்த்துவிட்டு, குஷ்பு ரசிகர் மன்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டன. தர்மத்தின் தலைவன் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமான அவர், அதன்பிறகு வருஷம் 16 படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக நடித்தார். இந்த படத்தை டைரக்டர் பாசில் இயக்கியிருந்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து குஷ்பு தமிழில் பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மன்னன், பாண்டியன், அண்ணாமலை போன்ற படங்களில் ரஜினிக்கும், சிங்காரவேலன் படத்தில் கமலுக்கும் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு ரிக்‌ஷா மாமா, பிரம்மா போன்ற படங்களில் சத்யராஜ் ஜோடியாக நடித்த அவர், பிரபுவுடன் நிறைய படங்களில் ஜோடியாக நடித்தார்.

- Advertisement -

சின்னதம்பி, மைடியர் மாா்தாண்டன், நாளைய செய்தி, தர்மசீலன், உத்தமராசா, பாண்டித்துரை என பல படங்களில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த குஷ்பு, ஒரு கட்டத்தில் டைரக்டர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், திடீரென குஷ்பு திமுக கட்சியில் சேர்ந்தார். அங்கு சில ஆண்டுகள் இருந்த அவர் பிறகு திமுகவில் இருந்து வெளியேறி, காங்கிரஸ் பக்கம் சென்றார். அங்கும் சில ஆண்டுகள் இருந்த குஷ்பு, அங்கிருந்தும் திடீரென வெளியேறி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இப்போது தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில், நேற்று திடீரென பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு குஷ்பு ஒரு கடிதம் எழுதினார். அதில் பாஜக தேர்தல் பிரசாரத்தில் தன்னால் பங்கேற்க முடியாது என்றும், தனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக முதுகுதண்டுவட பகுதியில் வலி இருப்பதால், பிரசாரம் செய்ய முடியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், திடீரென குஷ்பு, பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்தும் பிரசாரம் செய்ய மறுத்ததற்கு காரணம், நடிகை ராதிகாவுக்கு போட்டியிட தொகுதி வழங்கிய பாஜக, கட்சியில் சீனியரான தனக்கு தொகுதி ஒதுக்கவில்லை என்ற கோபம்தான். பாஜக கட்சியில் சமத்துவ மக்கள் கட்சி இணைந்த 2 நாட்களில் ராதிகாவுக்கு சீட் ஒதுக்கிக் கொடுத்த பாஜகவுக்கு பதிலடி தரும் விதமாகவே, அவர் தேர்தல் பிரசாரத்துக்கு உடல் நலத்தை காரணம் காட்டி, வர மறுத்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்