- Advertisement -
Homeபொழுதுபோக்குபுரட்சித் தலைவர் எம்ஜிஆரை பொன்மனச்செம்மல் என புகழ்ந்து பெயர் வைத்தது ஏன்? - கிருபானந்த வாரியார்...

புரட்சித் தலைவர் எம்ஜிஆரை பொன்மனச்செம்மல் என புகழ்ந்து பெயர் வைத்தது ஏன்? – கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொன்ன தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவிலும் அரசில் வாழ்விலும் ஒரு வரலாறாக வாழ்ந்து மறைந்தவர் எம்ஜிஆர். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்து 40 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் இன்னும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழக அரசியல் களத்தில் அதிர்வை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு அரசியல்வாதியும் எம்ஜிஆர் பெயர் சொல்லாமல் அரசியல் களத்தில் பேசுவதில்லை.

அப்படிப்பட்ட எம்ஜிஆருக்கு புரட்சித்தலைவர் மக்கள் திலகம் வாத்தியார் என பல பட்ட பெயர்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக பொன்மனச் செம்மல் என்ற பட்டம் அவருக்கு கிருபானந்த வாரியார் சுவாமிகளால் வழங்கப்பட்டது. ஒரு முறை அவரிடம் எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல் ஏன் நீங்கள் பெயர் வைத்தீர்கள் என்று சிலர் அவரிடம் கேட்டனர்.

- Advertisement -

அப்போது கிருபானந்த வாரியார் சுவாமிகள் கூறியதாவது, நான் எம்ஜிஆரை புத்தக வெளியீட்டு விழா குடமுழுக்கு விழா கோவில் கும்பாபிஷேக விழா போன்ற விழாக்களுக்கு அழைத்தால் அவர் கண்டிப்பாக வந்து விடுவார். அந்த நிகழ்ச்சியில் எனக்காக வந்து மகிழ்ச்சியாக கலந்துக்கொள்வார்.

ஆனால் அவரை நான் பலமுறை சாப்பிட விருந்துக்கு அழைத்து இருக்கிறேன். எப்போதுமே அவர் கடைசி பந்தி நடக்கும் நேரத்தில் தான் வந்து சாப்பிடுவார். எனக்கு இது பல நாட்களாக ஒரு பெரிய குழப்பமாக இருந்தது. ஏன் விருந்தில் சாப்பிட மட்டும் எப்போதுமே எம்ஜிஆர் தாமதமாக வருகிறார் என்று தோன்றியது.

- Advertisement -

இதுகுறித்து ஒரு முறை அவரிடமே நேரடியாக நான் கேட்டேன். அப்போது எம்ஜிஆர் என்னிடம் கூறுகையில், நீங்கள் ஒவ்வொரு முறை விருந்துக்கு அழைக்கும் போதும் நான் கடைசியாகதான் வந்து கலந்து கொள்கிறேன். அப்போது என்னுடன் கட்சி ஆட்களும் நிறைய பேர் வருவார்கள். முதலமைச்சர் நான் முதல் பந்திக்கே சாப்பிட வருகிறேன் என்றால் விருந்தில் பரிமாறுவார்கள் பலகாரங்கள் பதார்த்தங்கள் என அள்ளி எங்களுக்கே பரிமாறி விடுவார்கள்.

அதன்பிறகு பந்திகளில் சாப்பிட வருபவர்களுக்கு அது போல் பதார்த்தங்கள் பலகாரங்கள் பரிமாற முடியாத சூழல் உருவாகி சிரமம் ஏற்படும். அதனால்தான் எப்போதுமே நான் கடைசிப் பந்தியில் வந்து கலந்துக் கொள்கிறேன் என்று கூறினார். இதைக் கேட்டபோது எனக்கு இப்படி ஒரு தங்கமான மனசா என்று எம்ஜிஆரை பார்த்து வியந்து போனேன். அதன்பிறகு தான் அவருக்கு பொன்மனச் செம்மல் என்ற அந்த பெயரை சூட்டி புகழ்ந்து மகிழ்ந்தேன் என்று கிருபானந்த வாரியார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்