- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி உன் மியூசிக்ல பாடவே மாட்டேன்- கோபத்தில் எரிமலையாய் வெடித்த யேசுதாஸ், தலை தெறிக்க ஸ்டூடியோவை...

இனி உன் மியூசிக்ல பாடவே மாட்டேன்- கோபத்தில் எரிமலையாய் வெடித்த யேசுதாஸ், தலை தெறிக்க ஸ்டூடியோவை விட்டு ஓடிய தேவா, என்ன இருந்தாலும் இவ்வளவா கோபப்படுறது?

- Advertisement -

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் இசை ரசிகர்களின் மிகவும் விருப்பத்திற்குரிய பாடகராக திகழ்ந்து வருபவர். அவரது மென்மையான குரலை கேட்கும்போதெல்லாம் ஒரு சொப்பனத்தில் ஆடுவது போல் இருக்கும். அந்தளவுக்கு மிகவும் வசியமிக்க குரலுடையவராக வலம் வருபவர் யேசுதாஸ்.

இவ்வளவு மென்மையான குரலுக்குச் சொந்தக்காரரான யேசுதாஸ், மிகப் பெரிய கோபக்காரராம். சற்று சீண்டினாலும் கோபத்தில் வெடித்துவிடுவாராம். இந்த நிலையில் ஒரு பாடல் பதிவின்போது யேசுதாஸ் எரிமலையாய் வெடித்தது குறித்த சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் தேவா.

- Advertisement -

“தெற்குத் தெரு மச்சான்” என்ற திரைப்படத்திற்காக தேவா “ஏழேழு ஜென்ப பந்தம்” என்ற பாடலை யேசுதாஸின் குரலில் பதிவு செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி யேசுதாஸும் ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வந்திருக்கிறார்.

இந்த பாடலை காளிதாசன் என்ற கவிஞர் எழுதியிருந்தார். இந்த பாடலின் டிராக்கை தேவா ஏற்கனவே பாடியிருந்தார். எப்போதும் முதலில் டிராக் பாடி இயக்குனருக்கோ தயாரிப்பாளருக்கோ அனுப்புவது தேவாவின் வழக்கம். அதன் படி இந்த பாடலின் டிராக்கை இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான அன்பாலயா பிரபாகரனுக்கு அனுப்பி இருக்கிறார். அவரோ திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்டதனால் தேவாவுடைய குரல் அவரது மனதில் பதிந்துப்போய்விட்டது.

- Advertisement -

இப்போது ஸ்டூடியோவில் யேசுதாஸிற்கு கவிஞர் காளிதாஸ், பாடல் வரிகளை சொல்லியிருக்கிறார். அதில் ஏதோ சின்ன பிழை இருக்க, யேசுதாஸ் டென்ஷன் ஆகிவிட்டாராம். “நான் இனி பாத்துக்குறேன். நீ கிளம்பு” என்று கவிஞரை ஸ்டூடியோவுக்கு வெளியே துரத்திவிட்டாராம். அதன் பின் பாடல் வரிகளை தேவாவே யேசுதாஸிற்கு சொல்லித்தந்திருக்கிறார்.

அப்போது ஸ்டூடியோவிற்குள் தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனும் இருந்திருக்கிறார். யேசுதாஸ் பாடல் வரிகளை பாடிக்காட்ட, அப்போது அன்பாலயா பிரபாகரன், “சார், அப்படி பாடாதீங்க, இப்படி பாடுங்க” என்று தேவா டிராக்கில் பாடிக்காட்டியது போல் பாடிக்காட்டினாராம்.

தனக்கே பாடச் சொல்லிக்கொடுத்த நபரை பார்த்து, “நீ யாரு முதலில்?” என கேட்டாராம். அதற்கு பிரபாகரன், “நான் தேவாவுடைய அசிஸ்டென்ட்” என்று பொய் சொல்லியிருக்கிறார். மேலும், யேசுதாஸ் பாடியதில் தவறு இருப்பதாவும் கூறியிருக்கிறார்.

உடனே யேசுதாஸ் எரிமலையாய் வெடித்துவிட்டாராம். பிரபாகரனுக்கும் யேசுதாஸிற்கும் இடையே சண்டை முட்டிவிட்டதாம். இந்த சண்டைக்கிடையில் தேவா அந்த ஸ்டூடியோவை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டாராம். அதன் பின் யேசுதாஸ், “இனி நான் உன் மியூசிக்ல பாடவே மாட்டேன்” என்று தேவாவை பார்த்து கோபமாக சொல்லிவிட்டு போய்விட்டாராம். அதன் பின் கிட்டத்தட்ட 6 வருடங்கள் தேவா இசையில் யேசுதாஸ் பாடவே இல்லையாம்.

- Advertisement -

சற்று முன்