- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஷங்கர் மகன் அர்ஷித் ஜோடியாக நடிக்கும் நடிகை கிருத்தி ஷெட்டி - முதலில் நடிக்க...

இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஷித் ஜோடியாக நடிக்கும் நடிகை கிருத்தி ஷெட்டி – முதலில் நடிக்க கமிட் ஆன அந்த மலையாள இளம் நடிகை யார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குனர் ஷங்கர். கடந்த 30 ஆண்டுகளில் அவர் இயக்கிய 15 படங்களில் கடைசியாக அவர் இயக்கிய இந்தியன் 2 கேம்சேஞ்சர் என 2 படங்கள் மட்டுமே சரியாக போகவில்லை. மற்றபடி பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் ஷங்கர்.

குறிப்பாக அவர் இயக்கிய இந்தியன் எந்திரன் ரோபோ 2.0 சிவாஜி அந்நியன் ஐ நண்பன் பாய்ஸ் ஜீன்ஸ் காதலன் முதல்வன் ஜெண்டில்மேன் என ஷங்கர் இயக்கிய படங்கள் எல்லாம் தரமான சம்பவங்களாக தமிழ் சினிமாவில் இருந்திருக்கின்றன. இப்போது வேள்பாரி என்ற வரலாற்று நாவலை படமாக்க அவர் முயற்சித்து வருகிறார்.

ஏற்கனவே இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஷங்கரின் மகன் அர்ஷித் ஷங்கரும் படத்தில் நடிக்க வந்துவிட்டார். ஏஆர் முருகதாஸ் மணிரத்னம் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக சில காலம் பணிசெய்தவர் அர்ஷித். ஷங்கர் இயக்கிய படங்களிலும் அவர் உதவியாளராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கும் தர்மன் படத்தில் இயக்குனர் ஷங்கர் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் ஏற்கனவே வெளியானது. ஆனால் சிபி சக்ரவர்த்தி இயக்கினால்தான் ஷங்கர் நடிப்பதாக இருந்தது. இயக்குனர் மாறிவிட்டதால் தர்மன் படத்தில் ஷங்கர் நடிப்பது சந்தேகம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஷித் லவ்வர் பாய் என்ற புதிய படத்தில் அறிமுக நாயகனாக நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லியிடம் பல படங்களில் பணிசெய்த உதவி இயக்குனர் ஒருவர்தான் டைரக்ட் செய்கிறார். இந்த படம் மொத்தம் ரூ. 9 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக அதாவது நாயகன் அர்ஷித் ஷங்கருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது மலையாள இளம் நடிகை மமிதா பைஜூதான். ஆனால் அவர் நடிக்க விரும்பியும் கதை பிடித்திருந்தும் கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியவில்லை. பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் ஒரு படத்தில் ஏற்கனவே அவர் கமிட் ஆனதால் லவ்வர் பாய் படத்தில் நடிக்க முடியவில்லை என்று தெரிய வந்துள்ளது.

சற்று முன்