ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றது. அதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். அந்தப் படமும் தோல்வியையே சந்தித்தது. இந்த சூழலில் ஏதோ சில காரணங்களால் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனுஷை பிரிந்து வாழ்கிறார்.
திருமண முறிவுக்கு பிறகு தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்திய ஐஸ்வர்யா விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோரை வைத்து லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அவர் படத்தில் மொத்தம் 50 நிமிடங்கள்வரை வருவார் என கூறப்படுகிறது. இவர் தவிர கபில்தேவும் படத்தில் நடித்திருக்கிறார். ஏனெனில் படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் முடிந்து சில வாரங்களுக்கு முன்புதான் ரஜினிகாந்த் தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்தார். அதுகுறித்து ஐஸ்வர்யாவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் லால் சலாம் படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் தமிழ்நாட்டின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் கைப்பற்றியிருப்பதால் தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் படம் ரிலீஸாவது உறுதியாகியிருக்கிறது.
நிலைமை இப்படி இருக்க லால் சலாம் அப்டேட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்தில் இருக்கின்றனர். ஏனெனில் விடாமுயற்சி படத்தை தயாரிப்பதும் லைகா நிறுவனம்தான். விடாமுயற்சிக்கு பிறகு லைகா பேனரில் அறிவிப்பு வெளியான படங்களின் அப்டேட் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டோ பெயர் அறிவித்ததோடு நிற்கிறது.
Happy to announce LAL SALAAM will have a grand theatrical release 📽️ across Tamil Nadu by @RedGiantMovies_ @rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl @DOP_VishnuR @RamuThangraj @BPravinBaaskar @RIAZtheboss @V4umedia_ @gkmtamilkumaran… pic.twitter.com/i2PxiWdLHc
— Lyca Productions (@LycaProductions) October 12, 2023
அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் நடப்பதாக தகவல்கள் வெளியானாலும் அதையெல்லாம் நம்பும் மனநிலையில் அஜித் ரசிகர்கள் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு தேவை எல்லாம் லைகா நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புதான். தற்போது லால் சலாம் அப்டேட்டை பார்த்த ஏகே ரசிகர்கள் ஏன் சார் அந்த விடாமுயற்சியின் நிலைமை என்னதான்னு சொல்லுங்க சார் என்று கூறிவருகின்றனர். அதை பார்த்த மற்ற நடிகர்களின் ரசிகர்களோ உண்மையில் அஜித் ஃபேன்ஸ் பாவம் ப்பா என கலாய்த்துவருகின்றனர்.





