- Advertisement -
Homeபொழுதுபோக்குஹரீஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து படம் ஓடிடியில் இத்தனை கோடி லாபம் தந்ததா? வெளியான...

ஹரீஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து படம் ஓடிடியில் இத்தனை கோடி லாபம் தந்ததா? வெளியான புதிய தகவல் – மற்றொரு விஷயமும் தரமான சம்பவமா நடந்திருக்கே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படம்தான் லப்பர் பந்து. அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர்கள் ஹரீஷ் கல்யாண் கெத்து தினேஷ் காளி வெங்கட் பாலசரவணன் டிஎஸ்கே மற்றும் நடிகைகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி சுவாசிகா கீதா கைலாசம் தேவதர்ஷினி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படங்களில் லப்பர் பந்து படமும் மிக முக்கியமானது. கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் மாமனாருக்கும் மருமகனுக்கும் ஏற்படுகிற மோதல்தான் படத்தின் மையக் கருவாக இருந்தது.

- Advertisement -

இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டரும் இயல்பான யதார்த்தமான கதைக்களத்தில் ஒரு வாழ்வியல் சம்பவம் படமாக லப்பர் பந்து படத்தை காட்சிக்கு காட்சி உருவாக்கி இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அசத்தியிருந்தார். எந்தவிதமான அலங்காரமும் இல்லாமல் ஒரு யதார்த்த வாழ்க்கையை படமாக்கி தந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

லப்பர் பந்து படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் ரூ. 35 கோடிக்கு மேல் தியேட்டர்களில் வசூல் சாதனை புரிந்தது. மேலும் இந்த படத்தை ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனம் ரூ. 9 கோடி விலைக்கு வாங்கி தங்களது தளத்தில் வெளியிட்டது. தியேட்டரில் லப்பர் பந்து படத்தை ரசித்த ரசிகர்கள்,. ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பலமுறை திரும்ப திரும்ப பார்த்து ரசித்தனர்.

- Advertisement -

அந்த வகையில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் லப்பர் பந்து படம் ரிலீஸ் ஆன வகையில் ரூ. 22 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. மேலும் இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் முன்பு இருந்ததை விட இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்ட பின்பு ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை 2.25 லட்சம் வரை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

லப்பர் பந்து படம் ஓடிடி ரிலீஸ் செய்த வகையில் ரூ. 22 கோடி வருமானம், மேலும் 2.25 லட்சம் புதிய சப்ஸ்கிரைபர்கள் வருகை என ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்துக்கு லப்பர் பந்து படம் பெரிய அளவில் லாபம் தந்துள்ளது. அதனால் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள டீசல் படத்தை வாங்கவும் ஓடிடி நிறுவனங்கள் இடையே பலத்த போட்டி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்