- Advertisement -
Homeபொழுதுபோக்கு9 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படங்களுக்கு விருதுகளை அறிவித்த தமிழக அரசு - இவ்வளவு சீக்கிரமாக...

9 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படங்களுக்கு விருதுகளை அறிவித்த தமிழக அரசு – இவ்வளவு சீக்கிரமாக அறிவிச்சுட்டாங்களே என கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகையர், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட திரைத்துறை சார்ந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2014 மற்றும் 2015ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 36 வயதினிலே படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியற்காக ஜோதிகாவுக்கு சிறந்த நடிகை விருதும், இறுதிச்சுற்று படத்தில் சிறந்த நடிப்பை தந்ததற்காக நடிகர் மாதவனுக்கு சிறந்த நடிகர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சிறந்த படம் உள்ளிட்ட 7 விருதுகள் 36 வயதினிலே படத்துக்கு கிடைத்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்துக்கு 6 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 6 விருதுகள் சுதா கொங்காரா இயக்கிய இறுதிச்சுற்று படத்துக்கு கிடைத்துள்ளது. இப்படி 36 வயதினிலே, இறுதிச்சுற்று, தனி ஒருவன் ஆகிய படங்கள் தமிழக அரசின் விருதுகளை அதிக எண்ணிக்கையில் வென்றுள்ளன.

2014 – 2015ம் ஆண்டில் சிறந்த படமாக 36 வயதினிலே முதலிடத்தில், பசங்க படம் 2ம் இடத்திலும், சிறந்த படமாக பிரபா சிறப்பு பரிசு 3ம் இடத்திலும் தேர்வு செய்யப்பட்டுளளது. சிறந்த படம் சிறப்பு பரிசு இறுதிச்சுற்று, பெண்களுக்கான படம் என்ற வகையில் 36 வயதினிலே சிறப்பு பரிசும் வென்றுள்ளது.

சிறந்த நடிகர் மாதவன், சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் சிறப்பு பரிசு நடிகர் கெளதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு நடிகை ரித்திகா சிங் ( இறுதிச்சுற்று), சிறந்த வில்லன் நடிகர் அரவிந்த் சாமி ( தனி ஒருவன்), சிறந்த காமெடி நடிகர் சிங்கம்புலி, சிறந்த காமெடி நடிகை தேவதர்ஷினி, சிறந்த குணச்சித்திர நடிகர் தலைவாசல் விஜய், சிறந்த குணச்சித்திர நடிகை கௌதமி ( பாபநாசம்) சிறந்த இயக்குநர் சுதா கொங்காரா ( இறுதிச்சுற்று) சிறந்த கதாசிரியர் மோகன் ராஜா ( தனி ஒருவன்) சிறந்த பின்னணி பாடகர் கானா பாலா, பாடகி கல்பனா ராகவேந்தர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் ( உத்தம வில்லன்), சிறந்த ஒப்பனை கலைஞர் சபரிகிரிஷன், சிறந்த ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் என சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்பட விருதுகள் நாளை, புதன்கிழமை ( 6ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ராஜரத்னம் கலையரங்கில் நடக்கும் விழாவில், விருதுக்குரியவர்களுக்கு தங்கப்பதக்கம், காசோலை, நினைவுப்பரிசு கேடயம் வழங்கப்பட உள்ளது. அமைச்சர்கள் சாமிநாதன், மா சுப்ரமணியன், சேகர்பாபு ஆகியோர் விருதுகளை வழங்க உள்ளனர். 8 ஆண்டுகள் தாமதமாக இந்த விருதுகள் வழங்கப்படுவதை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

சற்று முன்