நடிகர் தனுஷ் நடிப்பில் அவரது இயக்கத்தில் வருகிற அக்டோபர் 1ம் தேதி இட்லி கடை படம் ரிலீஸாக உள்ளது. இந்த படம் வெளியாகும் அடுத்த நாளில் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான பான் இந்தியா படம் காந்தாரா சாப்டர் 1 படமும் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் வெளியான டிரெய்லர் ஒருவித ஏமாற்றத்தை தந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக ஆக்சன் ரொமாண்டிங் படங்களை இயக்கி வரும் நடிகர் தனுஷ் இந்த முறை இட்லி கடை படத்தில் சென்டிமென்ட் கதைக்களத்தை கையில் எடுத்திருக்கிறார். அப்பா மகன் பாசப்பிணைப்புதான் இந்த படத்தின் மையக்கதை. பிலீங் குட் சென்டிமென்ட் படமாக தான் இட்லி கடை படத்தை உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி மாமன் குடும்பஸ்தன் போன்ற குடும்ப கதைகளுக்கு யதார்த்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருப்பதால் ஃபேமிலி ஆடியன்ஸ்சை குறிவைத்து அவர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்கும் நோக்கத்தில்தான் இட்லி கடை படத்தை நடிகர் தனுஷ் இயக்கி உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் காந்தாரா சாப்டர் 1 படத்தை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் இட்லி கடை படத்துக்கு ஏற்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 1ம் தேதி தமிழ்நாட்டில் மொத்தம் 700 திரைகளில் இந்த படம் ரிலீஸாகிறது. அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று காந்தாரா சாப்டர் 1 படம் ரிலீஸாவதால் அன்று இட்லி கடை திரைகளின் எண்ணிக்கை 100 குறைந்து 600 ஆக மாறிவிடுகிறது.
அதே நேரத்தில் பெரிய திரைகள் அனைத்துமே இட்லி கடை படத்துக்கே ஒதுக்கப்படும் என்ற மனநிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் இருந்தாலும் இட்லி கடையை விட காந்தாரா சாப்டர் 1க்கு பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தால் ரசிகர்களின் வருகை அதிகாித்தால் இது அப்படியே தலைகீழாக மாறிவிடும்.
இட்லி கடையை அப்படியே திறந்து போட்டுவிட்டு காந்தாராவுக்கு தியேட்டர்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதற்கு திரைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விடுவார்கள். ஆனால் இட்லி கடை 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு படமாக உருவாகி இருப்பதால் இந்த போட்டியில் காந்தாராவை விட இட்லி கடைக்கே ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.





