- Advertisement -
Homeபொழுதுபோக்குமாமனாரின் மொத்த சொத்தையும் வளைத்து போட நடிகர் தனுஷ் செய்த அதிரடி பிளான், விழித்துக்கொண்ட லதா...

மாமனாரின் மொத்த சொத்தையும் வளைத்து போட நடிகர் தனுஷ் செய்த அதிரடி பிளான், விழித்துக்கொண்ட லதா ரஜினிகாந்த் – போட்டுத் தாக்கிய பிரபலம்

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் ஒன்றாய் வாழ்ந்த இந்த தம்பதிக்கு, யாத்ரா லிங்கா என்ற மகன்கள் உள்ளனர். டீன் ஏஜ் வயதில் உள்ள அவர்கள், இப்போது பள்ளிப் படிப்பில் இருக்கின்றனர்.

ரஜினிகாந்த் 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில், பல வெற்றி படங்களில் நடித்து இமாலய சாதனைகளை புரிந்து, இன்று இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் ஆக கவனிக்கப்பட்டு வருகிறார். 73 வயதிலும் இப்போதும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்த தனது 171-வது படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து 3 படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

- Advertisement -

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டில், தங்களது டுவிட்டர் பக்கத்தில் பிரிவதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினர். கடந்த 10 நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். வரும் அக்டோபர் 7ஆம் தேதி தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரையும் கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எப்படியும் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என்பது உறுதிதான்.

இதன் பின்னணியில் இருக்கும் சில விஷயங்கள் குறித்து பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் நேர்காணலில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் தனுஷ் பண விஷயத்தில் அவர் மனைவியை நம்புவதில்லை. மனைவியிடம் தனது நிதி விஷயங்களை பகிர்ந்து கொள்வதில்லை. ஆனால் ரஜினிகாந்த் அப்படியல்ல. இதுவரைக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தின் சம்பளம் 150 கோடி என்றால் அது அடுத்த நாள் லதா ரஜினிகாந்த் கைக்கு வந்துவிடும். அடுத்த நாட்களில் அந்த 150 கோடி ரூபாய்க்கு லதா சொத்துக்களை வாங்கி விடுவார்.

- Advertisement -

இப்படி கேளம்பாக்கத்தில் 40 ஏக்கர் பண்ணை தவிர நிறைய சொத்துகள் உள்ளன. இதுவரை ரஜினி சம்பாதித்த வகையில் 5000 கோடி ரூபாய்க்கு மேல் ரஜினிக்கு சொத்துக்கள் உள்ளன. எதிர்காலத்தில் அவரது இரண்டு மகள்கள் தான் அந்த சொத்துகளுக்கு வாரிசுகளாக இருப்பார்கள். ஆனால் நடிகர் தனுஷ் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி டைரக்சன், தயாரிப்பு என்று ஏகப்பட்ட கடன்களை வாங்கி கொண்டிருக்கிறார். இப்போதே நடிகர் தனுஷ்க்கு 200 கோடிக்கு மேல் கடன்கள் உள்ளது.

இதனால் மருமகன் தனுஷால், தங்களது சொத்துகளுக்கு ஆபத்து வந்து விடுமோ, 5000 கோடி சொத்துகளும் கடன்காரர்களுக்கு போய்விடுமோ என்ற அச்சத்தில்தான் லதா ரஜினிகாந்த், இந்த விவாகரத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அது மட்டுமின்றி ஒரு கட்டத்தில் ரஜினிகாந்தின் மொத்த சொத்தையும் வளைத்து விடலாம் என்று திட்டமிட்ட தனுஷ், முதல் கணவரை பிரிந்து விவாகரத்து செய்திருந்த சௌந்தர்யாவை வளைக்க பார்த்திருக்கிறார். இதை தெரிந்துக்கொண்ட லதா ரஜினிகாந்த், உடனடியாக சௌந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து, தனது 2வது மகளையும், சொத்தையும் காப்பாற்றி இருக்கிறார் என்று தமிழா தமிழா பாண்டியன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்