ஜனநாயகன் படத்தின் பல முக்கிய காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் அந்த படத்தின் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சார்பில் வெளியான வக்கீல் நோட்டீஸில் கூறியிருப்பதாவது, நான் கேவி என் புரடக்சன்ஸ் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர். எனது கட்சிக்காரரின் அறிவுறுத்தல்கள்படி இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.
எனது கட்சிக்காரர், விஜய் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைத்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் ஆவார். பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் திரையரங்கு சாட்டிலைட் ஓடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பை கொண்டுள்ளது. சட்ட விரோதமாக படத்தின் சில காட்சிகள் சில நபர்களால் அணுகப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டு நகலெடுக்கப்பட்டு பல மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதனால் பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளன. இது எனது கட்சிக்காரரின் கவனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியுடனும் அவசரத்துடனும் வந்துள்ளது. ஜனநாயகன் படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளிகளை வாட்ஸ் அப் டெலிகிராம் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் எக்ஸ் யூடியூப்கள் இணையதளங்கள் டோரண்டுகள் மற்றும் வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது அனுப்புவது பகிர்வது பதிவேற்றுவது மீண்டும் பதிவிடுவது சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச் செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும்.
இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக உட்படுவார்கள் என்றும் இதன் மூலம் குற்றவியல் நடவடிக்கைக்கு ஆளாவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கனவே உரிய சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.
மேலும் இத்தைகய சட்ட விரோத பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஜனநாயகன் படத்தில் இருந்து கசிந்த காட்சிகளை டிஜிட்டல் சமூக ஊடகங்களும் எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ பெறவோ சேமிக்கவும் அனுப்பவும் பகிரவும் அல்லது பரப்புதல் கூடாது என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இனிமேல் இதுபோன்ற எந்த செயலில் ஈடுபடுவோரும் அதன் விளைவுகளுக்கு தங்கள் சொந்த பொறுப்பில் உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனால் ஜனநாயகன் படக்காட்சிகளை யாரும் தங்களது போனில் இருந்து யாருக்கும் பகிர வேண்டாம் என்று இதன்மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.





