- Advertisement -
Homeபொழுதுபோக்குதூத்துக்குடியில் இருந்து ஜார்ஜியாவிற்கு நகன்ற படப்பிடிப்பு... பட்டையைக் கிளப்பும் லெஜன்ட் சரவணன்... ஜெட் வேகத்தில் செயல்படும்...

தூத்துக்குடியில் இருந்து ஜார்ஜியாவிற்கு நகன்ற படப்பிடிப்பு… பட்டையைக் கிளப்பும் லெஜன்ட் சரவணன்… ஜெட் வேகத்தில் செயல்படும் வெற்றிமாறனின் உதவியாளர்…

- Advertisement -

இப்போது இருக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் தங்கள் விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப செய்யும்போது பெரும்பாலும் அதன் உரிமையாளர்கள் வருவதையே நம்மால் பார்க்க முடிகிறது. இந்த முயற்சிக்கு, முதல்முறையாக வித்திட்டு அதை சக்ஸஸ்ஃபுல்லாக ஆக்கியவர் தான் லெஜன்ட் சரவணன்.

 

- Advertisement -

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அவர், முதலில் விளம்பரங்களில் தான் மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பிறகு வெள்ளித் திரையில் நடைபெற்ற முக்கியமான நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார். இங்குதான் அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை தோன்றியது.

 

- Advertisement -

உடனடியாக கதைகளை கேட்க ஆரம்பித்த அவர் தி லெஜன்ட் கதையை டிக் செய்து அதில் நடிக்க ஆரம்பித்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு ட்ரோல் மெட்டீரியல் ஆனது. இந்த திரைப்படத்தை கிண்டல் செய்யாத இணையதள பக்கமே இருக்க முடியாது என்று கூறலாம். அந்த அளவுக்கு பலரும் லெஜெண்ட் சரவணனை வறுத்தெடுத்தனர்.

 

அந்தத் திரைப்படம் கண்டன்ட் ரீதியாக வீக்காக இருந்தாலும், படத்தின் குவாலிட்டி சற்று நன்றாகவே இருந்தது என்று கூறலாம். பெரிய திரையில் பார்ப்பதற்கு ஏற்றது போலவே இந்த திரைப்படம் அமைந்திருந்தது. இருப்பினும் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக இந்த திரைப்படம் ரசிகர்களை கவர தவறியது. இப்படியான சூழலில் தான் தனது அடுத்த திரைப்படத்தை, வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்தார் லெஜன்ட் சரவணன்.

 

அதற்காக அவர் தற்போது டிக் செய்திருக்கும் இயக்குனர் தான் துரை செந்தில்குமார். எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், காக்கிச்சட்டை, தனுசை வைத்து கொடி, பட்டாசு ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். கடைசியாக அவர் வெற்றிமாறன் கதையில் இயக்கிய கருடன் திரைப்படம் வசூல் ரீதியாக கவனத்தைப் பெற்றது. அதில் சூரி, சசிகுமார் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

 

இப்படியான சூழலில் துரை செந்தில்குமார் அடுத்ததாக லெஜன்ட் சரவணனை வைத்து படம் எடுத்து வருகிறார். லெஜெண்ட் சரவணனின் சொந்த மாவட்டம் ஆன தூத்துக்குடியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தற்போது படக்குழு ஜார்ஜியாவிற்கு நகர்ந்துள்ளது. அங்கு முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில் இதன் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

- Advertisement -

சற்று முன்