விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் எஸ் எஸ் லலித்குமார் தயாரிக்க அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் விஜய் இரண்டு பாத்திரங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது ஒரு கேங்கஸ்டர் லியோவாக இருக்கும் விஜய், தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு பார்த்திபன் என்ற பெயரில் சாதாரண நபராக வேறு ஒரு இடத்தில் வசித்து வர, அவர் கேங்கஸ்டராக இருந்தபோது அவரை எதிர்த்த ஆட்கள் எல்லாம் மீண்டும் வர அதன் பின் மீண்டும் கேங்கஸ்டராக மாறுகிறார் என்பதுதான் “லியோ” படத்தின் கதை என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் நேற்று “லியோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த ஒரு முக்கியமான அப்டேட் வெளிவந்திருந்தது. “அல்டர் ஈகோ நான் ரெடி” என்ற பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாக வருகிற 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளிவந்தது. அந்த போஸ்டரில் விஜய் வாயில் சிகரெட்டுடனும் கையில் ஒரு துப்பாக்கியுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி, இந்த போஸ்டரை குறித்த ஒரு புதிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது அல்டர் ஈகோ என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒருவர் தன்னுடைய அடையாளத்தை மறைத்து வேறு ஒரு இடத்தில் வேறு ஒருவராக வாழ்ந்துகொண்டிருப்பதுதான் அல்டர் ஈகோவுக்கான அர்த்தமாம். மேலும் அந்த போஸ்டரில் இருக்கும் விஜய்தான் லியோ கதாப்பாத்திரமாம். லியோ புரொமோவில் வந்தவர் பார்த்திபன் கதாப்பாத்திரமாம். இவ்வாறு பிஸ்மி தனது வீடியோவில் கூறியுள்ளார்.





