விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” திரைப்படம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படமாக தற்போது இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் எங்கு திரும்பினாலும் “லியோ” குறித்தே பேசப்பட்டு வருகின்றன. விஜய் திரைப்படம் என்பதையும் தாண்டி லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் திரைப்படம் என்பதில் அதிக ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இத்திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட 2000 டான்சர்கள் கொண்ட ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சியை படக்குழு படமாக்கி முடித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
“லியோ” திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் 52 நாட்கள் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய ஊழியர்கள் காஷ்மீர் பணியில் எவ்வாறு மிகவும் கடினமாக உழைத்தனர் என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோ கூட வெளிவந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “லியோ” திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ் எஸ் லலித்குமார், காஷ்மீர் பணியில் அதிகாலை விஜய் செய்த காரியம் குறித்து ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அதிகாலை 7 மணிக்கே படப்பிடிப்பை தொடங்கிவிடுவார்களாம். அதிக பனிப்பொழிவு காரணமாக ஒரு நாள் விஜய்யிடம், “சார், நாளைக்கு உங்களுக்கு ஃபர்ஸ்ட் ஷாட் 11 மணிக்கு வைத்துக்கொள்ளலாம்” என லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். அதற்கு விஜய் சரி என்று சொன்னாராம். லோகேஷ் கனகராஜ் தனக்காகத்தான் இவ்வாறு படப்பிடிப்பை தாமதமாக தொடங்குகிறார் என்று புரிந்துகொண்ட விஜய், அடுத்த நாள் வழக்கம்போல் காலை 7 மணிக்கே படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துவிட்டாராம்.

இதனை பார்த்த படக்குழுவினர், 11 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய படப்பிடிப்பை விஜய் வந்துவிட்டார் என்ற காரணத்திற்காகவே 7 மணிக்கே தொடங்கிவிட்டனராம். இவ்வாறு காலை பனிப்பொழிவிலும் அவரது டெடிகேஷன் மெய்மறக்கச் செய்தததாக அப்பேட்டியில் லலித்குமார் பகிர்ந்துகொண்டுள்ளார்.





