விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவருகிறது. “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனராக பார்க்கப்படுகிறார். பாலிவுட், டோலிவுட் போன்ற சினிமாக்களின் முன்னணி கதாநாயகர்கள் லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறார்கள்.

தனது முதல் திரைப்படமான “மாநகரம்” திரைப்படத்திலேயே பலரையும் ரசிக்கவைத்தார். அதன் பின் “கைதி” திரைப்படம் அவரது கெரியரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டுச் சென்றது. அதன் பின் “மாஸ்டர்”, “விக்ரம்” என்று மிகப் பெரிய ஹிட் திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், தற்போது “லியோ” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் “விக்ரம்” திரைப்படத்தில் தனக்கென ஒரு யுனிவர்ஸை உருவாக்கிக்கொண்டார். “கைதி”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்கள் LCUக்குள் அடங்கியது. அதே போல் “லியோ” திரைப்படமும் LCUக்குள் வருமா? வராதா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது “லியோ” திரைப்படத்தை குறித்த ஒரு மாஸ் ஆன தகவல் இணையத்தில் வலம் வருகிறது. அதாவது “லியோ” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறதாம். “லியோ” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை 2025 அல்லது 2026 ஆம் ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இவ்வாறு ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆனால் இத்தகவலின் உண்மைத் தன்மை குறித்து தெரியவில்லை.





