நடிகர் மன்சூர் அலிகான், லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் திரிஷாவும் நடிக்கிறார் என்பதால் பெட்ரூம் சீன் இருக்கும். குஷ்பு, ரோஜாவை தூக்கிப் போட்டதை போல சீன் இருக்கும் என நினைத்தேன். ஆனால், கடைசி வரை திரிஷாவை கண்ணுல கூட டைரக்டர் காட்டலை என ஆதங்கமாக கூறி, கலாய்த்து இருந்தார்.
அதாவது முந்தைய படங்களை போல, ஹீரோயின்களுடன் வில்லன்கள் ஒன்றாக நடிக்கும் வாய்ப்பு, இப்போதைய படங்களில் இல்லை என்றுதான் அவர் சொன்னார். ஆனால், இதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் போன்றவர்களும் கண்டனம் தெரிவித்தது வைரலானது.
இந்த விவகாரம் மேலும் வளர்ந்து நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகர் சங்கம் என ஆளாளுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், பிரச்னை விஸ்வரூபமானது. இதில், தேசிய மகளிர் ஆணையம் மூலம், போலீசில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு, நிலமையை சீரியஸாக்கினார் குஷ்பு. இந்த விவகாரத்தில் சேரி மொழி என பேசி, குஷ்புவுக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்திய கதையும் இதில் இலவச இணைப்பாக நடந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில், மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட நிலையில், மன்னிப்பதுதான் தெய்வகுணம் என்று அவரும் பதிவிட, பிரச்னை ஒரு சுமூகமான முடிவுக்கு வந்தது. ஆனாலும், இந்த விஷயத்தில் சிரஞ்சீவி, குஷ்பு, திரிஷா ஆகியோர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடுவேன் என்று கூறியிருந்தார் மன்சூர் அலிகான்.
அதுமட்டுமின்றி, சில தினங்களுக்கு முன் நான் திரிஷாவிடம் மன்னிப்பு எல்லாம் கேட்கவில்லை. நான் போனில் மரணித்து விடு என்று சொன்னதை தான், என்னுடைய பிஆர்ஓ தவறாக புரிந்துக்கொண்டு மன்னித்துவிடு என அறிக்கையில் எழுதிவிட்டார். நானும் பிரச்னையை வளர்க்க வேண்டாம் என அப்படியே விட்டுவிட்டேன் என ஒரு அந்தர்பல்டி அடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை திரிஷாவுக்கு ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில், மன்சூர் அலிகான் விவகாரத்தில், இதுவரை நடந்த சம்பவங்கள், அதில் இறுதியான எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எழுத்து பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒருவேளை இது மான நஷ்ட ஈடு கேட்ட மன்சூர் அலிகான் அனுப்பிய நோட்டீஸ்தானோ என, திரிஷா தரப்பினர் அதிர்ச்சியடைந்த நிலையில், போலீஸ் தரப்பில் விளக்கம் கேட்டு வந்து கடிதம் என்பதால், வில்லங்கம் இல்லை என்று நிம்மதியடைந்துள்ளனர்.





