இயக்குனராக கோமாளி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அடுத்து இயக்குனராக மட்டுமின்றி ஹீரோவாகவும் லவ்டுடே என்ற மாஸ் ஹிட் படத்தையும் ரசிகர்களுக்கு கொடுத்தார். 3வது படமாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அவர் நடித்த டிராகன் படமும் பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக அமைந்தது. அதன்பிறகு பிரதீப் ரங்கநாதனை இப்போது ரசிகர்களும் கோலிவுட் வட்டாரத்திலும் பிஆர் என சுருக்கமாக அழைக்கின்றனர்.
அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் என்கிற பிஆர் நடிப்பில் வெளியாக உள்ள படம் எல்ஐகே. இந்த படம் முதலில் செப்டம்பர் 18ம் தேதி ரிலீஸ் என சொல்லப்பட்டது. அதன்பிறகு தீபாவளி ரிலீஸ் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அடுத்த ஆண்டு 2026ல் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று தான் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அப்போது நடிகர் அதர்வா நடித்த இதயம் முரளி படமும் வெளியாக உள்ளது. ஆனால் அது பிப்ரவரி 13ம் தேதி ஒரு நாள் முன்னதாக வெளியாகிறது. இந்த சூழலில் எல்ஐகே படம் வருகிற தீபாவளிக்கே ரிலீஸ் செய்யப்படவும் அதிக வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு லேட்டஸ்ட் தகவல் கூறுகிறது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டூட் என்ற படம் தீபாவளிக்கு ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தீபாவளி நாளில்தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் படமும் வெளியாக உள்ளது. இந்த 2 படங்களையுமே நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம்தான் உரிமம் வாங்கி உள்ளது. இப்போது இந்த 2 படங்களுமே ஒரே நாளில் ரிலீஸானால், அவர்கள் அந்த படங்களை ஓடிடி தளத்தில் ஒரே நாளில் அதாவது ஒரே தேதியில் வெளியிட நேரிடும்.
அப்படி அவர்களால் செய்ய முடியாது. 4 வாரங்கள் அல்லது 8 வாரங்கள் என்ற இடைவெளியில் படங்களை ஓடிடியில் வெளியிட்டாலும் ஒரே தேதியில் இந்த 2 படங்களையும் வெளியிட முடியாது. அதாவது டூட் படத்தை அவர்கள் தீபாவளி இல்லாமல் இன்னும் சில வாரங்கள் தள்ளி வைக்க வாய்ப்புள்ளது. அப்படி அவர்கள் முடிவு செய்யும் பட்சத்தில் தீபாவளிக்கு எல்ஐகே படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
அதனால் டூட் படம் ஒருவேளை நெட்பிளிக்ஸ் வெளியீடு காரணமாக தேதி தள்ளிப் போகும் பட்சத்தில் தீபாவளிக்கு எல்ஐகே படம் வரலாம். அல்லது அவர்கள் டூட் படம் தீபாவளிக்குதான் ரிலீஸ் என்று முடிவு செய்யும் பட்சத்தில் எல்ஐகே படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று ரிலீஸ் என்றும் தள்ளிப் போகலாம். இப்படி ஒரு குழப்பமான சிக்கல் நீடிப்பதால் எல்ஐகே படத்தின் உறுதியான ரிலீஸ் தேதி எப்போது எனத் தெரியாமல் பிஆர் ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.





