தமிழ் சினிமாவில் கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். நடிகர் ஜெயம் ரவி காஜல் அகர்வால் யோகிபாபு கேஎஸ் ரவிக்குமார் ராமர் பொன்னம்பலம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இதில் கேமியோவில் பிரதீப் ரங்கநாதன் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார்.
அடுத்து பிரதீப் ரங்கநாதன் அவரே கதாநாயகனாக நடித்து டைரக்ட் செய்த படம் லவ் டுடே. இந்த படத்தில் இவானா சத்யராஜ் ராதிகா சரத்குமார் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். காதலர்களின் மொபைல் போனை மையப்படுத்திய திரைக்கதையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.
தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன், ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் ஹயாடு லோகர் அனுபமா பரமேஸ்வரன் இவானா மிஷ்கின் கேஎஸ் ரவிக்குமார் மரியம் ஜார்ஜ் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படி தொடர்ந்து கோமாளி லவ்டுடே டிராகன் வெற்றிப் படங்களை கொடுத்ததால் தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதனுக்கு பெரிய அளவில் வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படம் வெளியானது.
ஆனால் டியூட் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வணிக ரீதியாக வெற்றிப் படமாகவே இருந்தது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் எல்ஐகே. இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்திருக்கிறார். படத்துக்கு அனிருத் தெரிவித்திருக்கிறார். இந்த படம் வருகிற 18ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டுள்ளது. எல்ஐகே படம் வருகிற டிசம்பர் 18ம் தேதி ரிலீஸ் ஆகாது என்ற உறுதியான தகவல் பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. அடுத்த ஆண்டு 2026 ஜனவரி 23ம் தேதி அல்லது பிப்ரவரி 12ம் தேதி எல்ஐகே படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவலை எல்ஐகே படத்தின் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் கூறியதாக தெரிய வந்துள்ளது.





