- Advertisement -
Homeபொழுதுபோக்குகலெக்ஷனில் கல்லா கட்டினாலும் கலவையான விமர்சனத்தையே பெற்ற லியோ... லோகேஷ் கனகராஜின் பதில் என்ன தெரியுமா?...

கலெக்ஷனில் கல்லா கட்டினாலும் கலவையான விமர்சனத்தையே பெற்ற லியோ… லோகேஷ் கனகராஜின் பதில் என்ன தெரியுமா?…

- Advertisement -

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக சேர்ந்த திரைப்படம் லியோ. செவன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சஞ்சய்தத், திரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இதன் இசை வெளியீட்டு விழா பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு போக, தமிழகத்தில் அதிகாலை காட்சிக்கும் அனுமதி கிடைக்காமல் போனது. கடைசி நேரத்தில் பல்வேறு சிக்கல்களைக் கடந்து லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தை போலவே கேரளா கர்நாடகா மாநிலங்களிலும் லியோ திரைப்படம் கொண்டாடப்பட்டது.

- Advertisement -

படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே இதில் எல்சியு-வில் வருமா என்று ரசிகர்கள் நாள்தோறும் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு தொடர்ந்து படக்குழு மௌனம் காக்க, திரையரங்குகளில் அது இருப்பது தெரிய வந்தது. ஆனால் இது ஏதோ சம்பிரதாயத்திற்காக எல்சியு வில் லோகேஷ் கனகராஜ் இணைத்திருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

லியோ திரைப்படமும் ஆரம்பத்தில் சுமாரான விமர்சனத்தையே பெற்றது. படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் அந்த அளவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்று பலரும் கூறினர். அதேசமயம் பார்த்தி கதாபாத்திரத்தில் விஜய், முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், இந்தப் படத்தில் வேறொரு விஜய்யை பார்க்கலாம் என்றும் விமர்சனங்கள் வெளிவந்தன.

- Advertisement -

எது எப்படி இருந்தாலும், படத்தின் வசூல் மட்டும் வேற லெவலில் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். படம் வெளியான முதல் நாளில் மட்டும் லியோ திரைப்படம் 148 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. ஆனால் இரண்டாம் நாளில் அது பாதியாக குறைந்ததாக கூறப்பட்டது. மூன்றாம் நாளை விட நான்காம் நாள் நன்கு வசூல் செய்திருக்கும் சூழலில், படத்திற்கான கலவையான விமர்சனம் குறித்து லோகேஷ் கனகராஜ் பதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், நான் இன்னும் நான்கு ஐந்து நாட்கள் பொறுமையாக காத்திருப்பேன். ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்று நான் பார்ப்பேன். அவர்களின் கருத்துக்களை ஆய்வு செய்வேன். இது அனைத்தையும் எனது அடுத்த படத்திற்கு முன்பு எடுத்துச் செல்வேன். தலைவர் 171 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்