- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படத்தோட அவ்வளவுதான், சினிமாவை விட்டு கிளம்புறேன்- ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

இந்த படத்தோட அவ்வளவுதான், சினிமாவை விட்டு கிளம்புறேன்- ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

- Advertisement -

“மாநகரம்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜ், தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி இயக்குனராக வலம் வந்தார். அதனை தொடர்ந்து “கைதி”, “மாஸ்டர்’, “விக்ரம்” போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை அறிமுகப்படுத்திய முதல் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் திகழ்கிறார். தனது “விக்ரம்” திரைப்படம் மூலம் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய லோகேஷ் கனகராஜ், அத்திரைப்படத்தில் “கைதி” திரைப்படத்தின் தொடர்ச்சியான காட்சிகளை இடம்பெற வைத்தார்.

அதனை தொடர்ந்து “லியோ” திரைப்படமும் LCUக்குள் வருமா? வராதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் லோகேஷ் கனகராஜ். அப்போது பேசிய அவர், “நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்ற திட்டமே என்னிடம் கிடையாது. ஐ ஜஸ்ட் வான்ட் டூ ட்ரை இட் அவுட். அதனால்தான் நான் சினிமாவுக்குள் வந்ததே. இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸ் முயற்சி செய்தது கூட என் படத்தில் நடித்த அனைத்து ஹீரோக்களுக்கும் என் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். யுனிவர்ஸ் என்பது உடனே நடந்துவிடும் ஒன்று அல்ல. அதற்கு நிறைய குழப்பங்கள் உண்டு.

அதே போல் எல்லா நடிகர்களுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. அவர்களை எல்லாம் ஒன்றாக கொண்டு வரும்போது நம்முடைய பொறுப்பும் கூடுகிறது. அதன் முயற்சியாகத்தான் விக்ரம் படத்தையும் கைதி படத்தையும் கிராஸ் ஓவர் செய்து யுனிவர்ஸ் என்ற ஒன்றை கொண்டு வந்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பு மிக அதிகமாக இருக்கிறது. ஆதலால் இனி அவசரப்படாமல் அந்த வரவேற்பை குறைத்து மதிப்பிடாமல் ரொம்ப நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்து நான் ஒரு பத்து திரைப்படங்கள்தான் இயக்குவேன், அதன் பின் சினிமாத்துறையில் இருந்து விலகி விடுவேன்” என கூறியிருக்கிறார். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

 

 

சற்று முன்