- Advertisement -
Homeபொழுதுபோக்குஎடுத்து வைத்த முதல் அடியிலேயே வெற்றி வாசலை திறந்து வைத்த நடிகர் விஜய், ஆனா அவரை...

எடுத்து வைத்த முதல் அடியிலேயே வெற்றி வாசலை திறந்து வைத்த நடிகர் விஜய், ஆனா அவரை நம்பாமல் இந்த மசாலா ஹீரோக்களை நம்பி ஏமாந்துட்டீங்களே? – போட்டுத் தாக்கிய பிரபலம்!

- Advertisement -

அவர் தொட்டதெல்லாம் வெற்றி என்று சொல்வார்கள். அது சினிமா நடிகர்களில் யாருக்கு பொருந்துகிறது இல்லையோ, நடிகர் விஜய்க்கு நிச்சயமாக பொருந்தும். ஏனென்றால் அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள், படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் பெரிய லாபம் அடைந்திருக்கின்றனர். விஜயின் தோல்வி படங்கள் கூட லாபத்தில் வருமானம் குறையுமே தவிர, அவரது படம் நஷ்டத்தை ஏற்படுத்தியது இல்லை.

அதனால் தான் விஜய் படங்களை இயக்க இயக்குனர்களும், தயாரிக்க தயாரிப்பாளர்களும் அந்த அளவுக்கு ஆர்வம் காட்டுகின்றனர். அவரது கால் ஷீட்டுக்காக தவம் இருக்கின்றனர். நடிகர் விஜயை பொறுத்தவரை அவரது படங்கள் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி அடைந்து விடுகின்றன. கடந்தாண்டில் வெளியான லியோ படம் கூட அந்த வகையைச் சார்ந்ததுதான். கடந்த மாதம் வெளியான தி கோட் படமும் விமர்சன ரீதியாக முதலில் குறை சொல்லி பேசப்பட்டாலும் பிறகு விஜயின் வில்லன் நடிப்பு இந்த படத்துக்கு பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் கத்தி என்ற படம் மூலமாக தான் தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிறுவனமாக முதலில் அறிமுகமானது. இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் கத்தி படத்தில் நடித்திருந்தார். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம், 128 கோடி ரூபாய் வசூலித்தது.முதல் படத்திலேயே லைகா நிறுவனத்துக்கு 58 கோடி ரூபாய் அதிக லாபத்தை கத்தி படம் கொடுத்தது.

ஆனால் சமீப காலமாக லைகா நிறுவனம் தயாரிக்கும் படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றன. பட்ஜெட்டில் போட்ட முதலீட்டை எடுக்க முடியாத அளவுக்கு அவரது படங்கள் நஷடத்தை, ஏமாற்றத்தை தந்து வருகின்றன. குறிப்பாக பொன்னியின் செல்வன் 1 பாகம் நன்றாக ஓடிய நிலையில், 2 பாகம் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்து, பலத்த நஷ்டத்தை தந்தது.

- Advertisement -

அதேபோல் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படமும் படுதோல்வி அடைந்தது. மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படமும் பிளாப் ஆனது. அதன் பிறகு, ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படமும் பலத்த நஷ்டத்தை லைகா நிறுவனத்துக்கு கொடுத்தது. இப்போது லைகா தயாரிப்பில் வெளிவந்துள்ள வேட்டையன் படமும் எந்த அளவுக்கு லாபத்தை தரப்போகிறது என்று தெரியவில்லை. நிச்சயமாக ஜெயிலர் படம் அளவுக்கு இந்த படம் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் எடுபடாது.

இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில், தமிழில் லைகா தயாரித்த முதல் படம் கத்தி பிரமாண்டமான வெற்றி பெற்றது. அதன் பிறகு விஜயுடன் ஏன் படம் செய்யவில்லை என்று தெரியவில்லை. ரஜினி கமலை வைத்து தர்பார், லால் சலாம், இந்தியன் 2 எதுவுமே தேறவில்லை. வேட்டையன் தேற வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டு விஜய் நடித்த கத்தி படத்தின், 50வது நாள் வெற்றி போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்