- Advertisement -
Homeபொழுதுபோக்குமதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகள் மும்முரம் - எப்போ எங்கே நடக்குதுன்னு தெரியுமா?...

மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகள் மும்முரம் – எப்போ எங்கே நடக்குதுன்னு தெரியுமா? – உற்சாகத்தில் எஸ்கே ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 2012ம் ஆண்டில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக மாறியிருக்கிறார். 13 ஆண்டுகளில் அசுரத்தமான ஒரு வளர்ச்சியை அவர் பெற்றிருக்கிறார். இதுவரை அவரது நடிப்பில் 22 படங்களே வெளியாகி இருக்கின்றன.

முதல் படத்தில் நடிக்க ரூ. 10 ஆயிரம் சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன், இப்போது அவர் நடித்து வரும் 25வது படம் பாரசக்தி படத்துக்கு ரூ. 70 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் பராசக்தி படம் முதலில் நடிகர் சூர்யா நடித்த நிலையில், பிறகு அவர் விலகியதால் இப்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயனை பொருத்த வரை அவரது சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத போதிலும் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை தந்து தனது இமேஜை தக்க வைத்துக்கொண்டார். தனது கதைகள் மற்றும் கதாநாயகிகளை அவரே தேர்வு செய்தார். நல்ல இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதே நேரத்தில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கி, பல படங்களை தயாரித்து பலமுறை பலத்த நஷ்டங்களையும் அவர் சந்தித்து விட்டார். வாங்கிய கடனுக்கும் வட்டிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் சில படங்களில் சம்பளம் வாங்காமலேயே நடித்துக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அமரன் படம் தந்த அபார வெற்றி, அவரது சம்பளத்தை ரூ. 70 கோடிக்கு உயர்த்தி விட்டது.

- Advertisement -

ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படமும், அவரது நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள மதராஸி படமும் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்து விட்டால் சிவகார்த்திகேயனின் சம்பளம் ரூ. 100 கோடியாக அதிகரித்து விடும். ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் வரிசையில் சிவகார்த்திகேயனும் ரூ. 100 கோடி சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திர நடிகராக மாறிவிடுவார்.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். மதராஸி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

- Advertisement -

சற்று முன்