- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படம் சென்டிமென்டில் தன் படத்தை ரிலீஸ் செய்யும் நடிகர் சிவகார்த்திகேயன் - அட போட்டிக்கு...

விஜய் படம் சென்டிமென்டில் தன் படத்தை ரிலீஸ் செய்யும் நடிகர் சிவகார்த்திகேயன் – அட போட்டிக்கு அந்த நடிகரும் வந்துவிட்டாரா? ஒரே அக்கப்போர்தான் போங்க!

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது காமெடி ஷோவில் தொகுப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். பிறகு நீயா நானா கோபிநாத்துடன் இணைந்து திரைப்பட விருது விழாக்களை தொகுத்து வழங்கினார். சில இயக்குனர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை நேரில் பேட்டி கண்டார். அவரது காமெடியான பேச்சும் துருதுருப்பான செயல்பாடுகளும் இயக்குனர் பாண்டிராஜனை கவர்ந்தது.

இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டில் ரூ. 10 ஆயிரம் சம்பளம் கொடுத்து தனது மெரினா படத்தில் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். இதில் நடிகை ஓவியா கதாநாயகியாக நடித்தார். காமெடி படமாக இது ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை வரவேற்பை பெற்றது. தொடர்ந்து எழில் இயக்கிய மனம் கொத்திப் பறவையும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய கவனத்தை கொடுத்தது.

- Advertisement -

தொடர்ந்து தனது படங்களை கேரக்டர்களை கவனித்து தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் ரெமோ காக்கிச்சட்டை வேலைக்காரன் டாக்டர் மாவீரன் அயலான் அமரன் என நடித்து இப்போது முன்னணி நடிகராக மாறிவிட்டார். ஒரு படத்தில் நடிக்க ரூ. 70 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இப்போது பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் வருகிற செப்டம்டர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படம் வெளியாகும் இதே நாளில்தான் கடந்த ஆண்டு விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படமும் வெளியானது. இதில் கிளைமாக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் நடிகர் சிவகார்த்திகேயனும் நடித்திருந்தார்.

- Advertisement -

தி கோட் படத்தில் அந்த காட்சியில், விஜய் தனது கையில் இருக்கும் துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து விடுவார். அன்று முதல் சினிமாவை விட்டு விலகும் விஜய் இடத்துக்கு அடுத்து வரப்போகிறவர் நடிகர் சிவகார்த்திகேயன் தான் என்று தமிழ் சினிமாவில் பலரும் கூறி வருகின்றனர். அவரது ரசிகர்களும் அதை உறுதியாக நம்புகின்றனர். இந்த சூழலில் கடந்தாண்டில் தி கோட் படம் வெளியான அதே நாளில் மதராஸி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இப்போது அதே செப்டம்பர் 5ம் தேதி நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த சக்தி திருமகன் படமும் ரிலீஸாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக விஜய் ஆண்டனி படம் வெளியாகிறதா என்று கேட்டால், ஒரு பெரிய படம் வரும்போது எனது படமும் வெளியானால் ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் என் படத்துக்கும் அதிக கவனம் கிடைக்கும். மற்றபடி மதராஸி படத்துக்கு என் படம் போட்டியாக வெளியாகவில்லை என்று படத்தின் நாயகன் நடிகர் விஜய் ஆண்டனி விளக்கமும் தந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்