- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் விஜயை வைத்து ஏன் இன்னும் படம் எடுக்கவில்லை என தெரியுமா... சீக்ரெட்டை ஓப்பன் பண்ண...

நான் விஜயை வைத்து ஏன் இன்னும் படம் எடுக்கவில்லை என தெரியுமா… சீக்ரெட்டை ஓப்பன் பண்ண சிறுத்தை சிவா… சிலிர்த்துப் போன ரசிகர்கள்…

- Advertisement -

இயக்குனர் சிவா தமிழில் சிறுத்தை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தெலுங்கு படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட இதில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட், அதில் ஒருவர் போலீஸ், ஒருவர் திருடன் என வழக்கமான பார்முலாவை இந்த திரைப்படம் கொண்டிருந்தாலும், கமர்சியல் திரைப்படங்களுக்கு உண்டான அத்தனை விஷயங்களும் சரிவிகிதத்தில் இருந்ததால் சிறுத்தை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

இந்த திரைப்படம் கொடுத்த வெற்றியால், அன்று முதல் சிறுத்தை சிவா என்றே அவர் அழைக்கப்பட்டு வருகிறார். இதன் பிறகு அஜித்துடன் இணைந்த அவர், அடுத்தடுத்து நான்கு திரைப்படங்களை இயக்கி அதிர்ச்சியூட்டினார். இதில் முதல்முறையாக அஜித் மற்றும் சிறுத்தை சிவா இணைந்து எடுத்த வீரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

அதற்கு முன்பாக ஒரே நகரம் சார்ந்த கதையாக அஜித் நடித்து வந்தார். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வேட்டி சட்டையுடன் பக்காவாக அஜித் காட்சியளிக்க கமர்சியல் ஹிட் கொடுத்தது வீரம். பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியான வேதாளம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

இப்படியான சூழலில் தான் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் அஜித் இணைந்தார். நிச்சயம் அவர் ஹாட்ரிக் வெற்றியை கொடுப்பார் என்று பலரும் கூறிவந்த நிலையில், விவேகம் திரைப்படம் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. பிறகும் மீண்டும் இதே கூட்டணி இணைந்து விசுவாசம் என்னும் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது.

 

இதன் பிறகு சிறுத்தை சிவா ரஜினிகாந்த் உடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அதுவும் தோல்வியை தான் சந்தித்தது. இப்படியான சூழலில் தற்போது சூர்யாவை வைத்து அவர் கங்குவா திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். பிரம்மாண்ட முறையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது.

 

இந்த நிலையில் அதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுத்தை சிவாவிடம், நீங்கள் விஜய்யுடன் இணைந்து ஏன் படம் இயக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய சிறுத்தை சிவா, ஏற்கனவே சில முறை விஜயை சந்தித்து நான் கதை கூறினேன். அதனைக் கேட்டுவிட்டு அவரும் நடிப்பதாக உறுதி அளித்தார். ஆனால் அதற்கான காலம் தான் சரியாக அமையவில்லை. இது ஒன்றுதான் நாங்கள் இருவரும் இணையாமல் இருப்பதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்