- Advertisement -
Homeபொழுதுபோக்குபழம்பெரும் மராட்டிய நடிகர் ரவீந்திர மகாஜனி மர்ம மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

பழம்பெரும் மராட்டிய நடிகர் ரவீந்திர மகாஜனி மர்ம மரணம்! திரையுலகினர் அதிர்ச்சி!

- Advertisement -

மராட்டிய திரையுலகின் பழம்பெரும் நடிகராக வலம் வந்தவர் ரவீந்திர மகாஜனி. இவர் மும்பை சா பாஜ்டார், ஜூன்ஜ், கலத் நகாலத் உள்ளிட்ட பல்வேறு மராட்டிய திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான அஷுதோஷ் கவுரிகரின் பானிபட் என்ற படத்திலும் ரவீந்திர மகாஜனி நடித்து இருந்தார்.

ravindra

இந்த திரைப்படத்தில் அர்ஜுன் கபூர் மற்றும் கிரித்தி சனோன் ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்து உள்ளனர். இதனை தொடர்ந்து அவர் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில், அவர் தனது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மராட்டிய திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அவரது இல்லத்தில் அவர் சுமார் 3 நாட்களுக்கு மேலாக சடலமாக கிடந்துள்ளதாக கூறப்படுகிறது. பூட்டியிருந்த அவரது வீட்டில் இருந்து கடந்த சில நாட்களாக அவர் வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரிந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவரது உடல் அழுகிய நிலையில், துர்நாற்றத்துடன் கிடப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவரது மரணம் கொலயா? அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும் என கூறியுள்ளார். மராட்டிய நடிகர் ரவீந்திர மகாஜனி தனது இல்லத்தில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்