- Advertisement -
Homeபொழுதுபோக்குமம்முட்டியை வைத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் திரைப்படத்தின் கதை இதுதான்... அடடே இந்த ஜானரில்...

மம்முட்டியை வைத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் திரைப்படத்தின் கதை இதுதான்… அடடே இந்த ஜானரில் அந்த இயக்குனர் கில்லாடி ஆச்சே…

- Advertisement -

இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். ராஜீவ் மேனன் இயக்கிய மின்சார கனவு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து போவார் கௌதம் மேனன். வெள்ளி திரையில் பெரிய படத்தை இயக்க துடித்துக் கொண்டிருந்த அவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது மின்னலே.

 

- Advertisement -

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களை பட்டியலிட்டால் அதில் மின்னலே திரைப்படத்திற்கு நிச்சயம் ஒரு பெரிய இடம் இருக்கும். அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தில் காதல் ரசத்தை அள்ளி ஊற்றி இருந்தார் கௌதம் மேனன். இப்படி முதல் திரைப்படத்தை முழுக்க முழுக்க காதல் படமாக எடுத்துவிட்டு அடுத்த படத்தை காவல் துறை சார்ந்த படமாக எடுத்து ஆச்சரியமூட்டினார் கௌதம் மேனன்.

 

- Advertisement -

காக்க காக்க திரைப்படமாக இது உருவாகி கௌதம் மேனனுக்கு மட்டுமல்ல சூர்யாவுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு பிளாட்பார்ம் ஆக அமைந்தது. இங்கிருந்து கௌதம் வெற்றிப்பாதையிலேயே பயணித்தார். வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என அவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் சொல்லி அடித்தன.

 

அஜித்தை வைத்து என்னை அறிந்தால் திரைப்படத்தையும் அவர் இயக்கினார். இடையே நடுநிசி நாய்கள் நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தன. இந்த நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை இயக்கி அதில் தயாரிப்பாளராகவும் இருந்து கடன் சுமைக்கு இயக்குனர் ஆளானார்.

 

இதிலிருந்து மீண்டு வருவதற்காக, திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் கௌதம் மேனன். இதிலும் சில குறிப்பிட்ட திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை தேடித் தந்தன. இப்படியான சூழலில் தற்போது முதல் முறையாக அவர் நேரடியாக ஒரு மலையாள திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். மெகா ஸ்டார் மம்முட்டி தான் இந்த திரைப்படத்தில் நடிக்கவும் தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

 

இந்த திரைப்படத்திற்கு, டாமினிக் அன்ட் தி லேடீஸ் பர்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் துப்பறிவாளராக நடித்திருக்கிறார் மம்முட்டி. ஒரு நகரில் இளம் பெண்கள் தொடர்ச்சியாக காணாமல் போய்க்கொண்டிருக்க, அதில் ஒரு பெண்ணின் பர்ஸ்சில் இருந்து விசாரணையை மம்முட்டி தொடங்குவது தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. தர்பூகா சிவா இசையமைத்திருக்கும் இந்தத் திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்