- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதன்முறையாக ஆக்சன் அதிரடி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நடிகர் மணிகண்டன் - மக்கள் காவலன்...

முதன்முறையாக ஆக்சன் அதிரடி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் நடிகர் மணிகண்டன் – மக்கள் காவலன் எப்படிப்பட்ட கதை தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து யதார்த்தமான கதைகளில் நடித்து வருபவர் இளம் நடிகர் மணிகண்டன். குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் என தொடர் வெற்றி படங்களுக்கு பிறகு மணிகண்டனின் இமேஜ் நன்றாக உள்ளது. அவருக்காக படம் தயாரிக்கவும் அவரை வைத்து படம் டைரக்ட் செய்யவும் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் மணிகண்டன் நடிப்பில் அடுத்து மக்கள் காவலன் என்ற படம் வெளியாக உள்ளது. பொதுவாக ஆக்சன் படங்களில் நடித்துதான் ஒரு ஹீரோ அடுத்த நிலைக்கு போகின்றனர்.அதே போல் நடிகர் மணிகண்டன் முதன்முறையாக முழு நீள ஆக்சன் கதையில் உருவாகும் மக்கள் காவலன் படத்தில் ஆக்சன் ஹீரோவாக மாறி போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருக்கிறார். மக்கள் காவலன் படத்தை சந்தோஷ்குமார் டைரக்ட் செய்திருக்கிறார்

- Advertisement -

கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதன் கதை இது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு அவனுக்கு சரணடைந்ததா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரண்டு வழிகளை விட்டுச் செல்கிறது. ஒருவரின் உயிர் வாழ்வுக்கான போராட்டமாக தொடங்கும் இந்த பயணம் அவர் விரும்பாமலேயே மக்களின் தலைவராக மாறும் அளவிற்கு வளர்கிறது.

போராட்டம் தீவிரமடையும் போது அதன் விளைவும் அதிகரிக்கிறது. இறுதியில் ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்கள் காவலனுக்கும் இடையேயான எல்லை மெதுவாக மறைந்து விடுகிறது என்று இந்த கதை சொல்கிறது. மக்கள் காவலன் படத்தில் மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர் ஏ வெங்கடேஷ் ஆர்கே விஜய் முருகன் சண்முகம் முத்துசாமி பிரபு உன்னிமாயா திவ்யாஸ்ரீ பாதா ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மக்கள் காவலன் படம் குறித்து நடிகர் மணிகண்டன் கூறியதாவது, மக்கள் காவலன் என்பது கலாச்சாரம் மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட ஒரு தனித்துவமான ஆக்சன் படமாகும். இந்த கதையின் புதுமையும் நேர்மையும் என்னை உடனே கவர்ந்தது. அதுவே இந்த படத்தில் என்னை நடிக்க தூண்டியது.

இது விறுவிறுப்பான தீவிரமான இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான திரைப்படம். படத்தின் இயக்குனர் சந்தோஷ்குமார் இந்த கதையை முதன்முதலாக சொன்ன போதே நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவு படமாகும். நாங்கள் நினைத்தபடியே இந்த படம் உருவாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் மணிகண்டன் மகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்