- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் இதுதான்... மனம் திறந்து பேசிய மஞ்சு வாரியர்... எதிர்பார்ப்பை எகிற...

வேட்டையன் திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் இதுதான்… மனம் திறந்து பேசிய மஞ்சு வாரியர்… எதிர்பார்ப்பை எகிற தூண்டிய அப்டேட்ஸ்…

- Advertisement -

ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதில் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. மிகவும் தொய்வான திரைக்கதையால் அந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கொடுக்க ரசிகர்கள் மறுத்தனர்.

 

- Advertisement -

இப்படி லால் சலாம் திரைப்படம் வந்த இடம் தெரியாமல் மறைந்து போக அடுத்ததாக, வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்தில் எப்படி சிவராஜ் குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் இருந்தார்களோ அதே மாதிரி இந்த திரைப்படத்திலும் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

- Advertisement -

குறிப்பாக பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் இந்த படத்தில் உள்ளார். இதுபோக தெலுங்கில் இருந்து ராணாவை அழைத்து வந்திருக்கிறார்கள். மலையாளத்திலிருந்து மஞ்சு வாரியர் மற்றும் பகத் பாசில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதுபோக இறுதிச்சுற்று திரைப்படத்தில் கலக்கிய ரித்திகா சிங் படத்தில் இருக்கிறார்.

 

தமிழில் இருந்து துஷாரா விஜயன் நடித்துள்ளார். ஜெய் பீம் திரைப்படத்தை எடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை உலுக்கிய இயக்குனர் ஞானவேல் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார். லைக்கா நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. திருவனந்தபுரத்தில் தொடங்கிய இதன் படபிடிப்பு திருநெல்வேலி நாகர்கோயில் உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

 

கல்வித்துறையில் நடைபெறும் மோசடிகளை மையப்படுத்தி இந்த திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இருக்கிறாராம் ஞானவேல். அதிலும் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. அதில் ரஜினிகாந்தின் பஞ்ச் டயலாக் ஒன்றும் இடம் பெற்று இருந்தது. குறி வச்சா இரை விழனும் என்று அவர் பேசிய வசனம் ரசிகர்களிடம் ரீச் ஆனது.

 

அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த திரைப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை மஞ்சு வாரியர், வேட்டையன் திரைப்படத்தில் தான் ரஜினிக்கு மனைவியாக நடித்திருப்பதாக கூறியிருக்கிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தில் ராணாதான் வில்லன் என்றும் கூறப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்