- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் சூர்யா 45 - இந்த படத்தில் அந்த...

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் சூர்யா 45 – இந்த படத்தில் அந்த கேரக்டரில் நடிகர் மன்சூர் அலிகான் நடிக்கிறாரா? போடு வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் வரவேற்பை பெற்ற ஒரு சிறந்த கலைஞனாக இருப்பவர் நடிகர் மன்சூர் அலிகான். ஆரம்பத்தில் நடனக்குழுவில் ஒருவராக பல படங்களில் நடனமாடியவர். அதன்பிறகு பல படங்களில் அடியாட்களில் ஒருவராக நடித்திருக்கிறார். பிறகு கேப்டன் பிரபாகரன் படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார்.

கேப்டன் விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன். அவரது படத்தில் வீரபத்ரன் என்ற வில்லன் கேரக்டரில் மன்சூர் அலிகானை நடிக்க வைத்து, அவரது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த் தான். அதனால் விஜயகாந்த் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர் மன்சூர் அலிகான்.

கேப்டன் பிரபாகரன் படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு ரஜினி சத்யராஜ் சரத்குமார் முரளி கார்த்திக் ராமராஜன் விஜய் அஜீத்குமார் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பெரிய வரவேற்பை பெற்றவர் மன்சூர் அலிகான். ஜனநாயக புலிகள் படை என்ற அரசியல் கட்சி தலைவராகவும் இப்போது இருக்கிறார்.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார் மன்சூர் அலிகான். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. எனினும் அரசியல் சமூகம் சினிமா சார்ந்த பல கருத்துகளை அவ்வப்போது வெளிப்படையாக பேசி வருகிறார். இது சில நேரங்களில் அவர் மீதான சர்ச்சையை அதிகரிக்க செய்து வருகிறது.

கங்குவா படத்தின் படுதோல்விக்கு பிறகு சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதைத்தொடர்ந்து சூர்யாவின் 45வது படம் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வேகமாக உருவாகி வருகிறது. கோவையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்போது சென்னையில் 2ம் கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

சூர்யா 45 படத்தில் நடிகர் மன்சூர் அலிகானும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் சூர்யாவை எதிர்க்கும் வில்லன் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் வில்லனாக ஆர்ஜே பாலாஜி நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், இப்போது மன்சூர் அலிகானும் வில்லனாக நடிப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது. வில்லன் நடிப்பில் அசத்தக் கூடியவர் மன்சூர் அலிகான் என்பதால், சூர்யா 45 படம் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கூறத் துவங்கி விட்டனர்.

சற்று முன்